பக்கம்:உலகியல் நூறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ அறவியல் 1. வாய்மை பொய்யாமை வாய்மை புறத்தும் பிறர்க்கூறு செய்யாமை உள்ளச் சிறப்பென்க - வையத்து வாழ்ந்தார் அகத்தெண்ணும் வாழ்வெல்லாம் வாய்மைக்கண் ஆழ்ந்தார் அவரென்னும் ஆறு ! 66 பொழிப்பு : பொய்யாக இல்லாதது வாய்மை. புற நிலையான் பிறர்க்கு ஊறு செய்யாதிருத்தலே உள்ளத்தின் சிறந்த தன்மையாகும் என்க. இவ் வையத்தின்கண் இன்று வரை வாழ்ந்து போயினரை உள்ளத்தில் வைத்துப் போற்று கின்ற தன்மை எல்லாம் வாய்மை நிலையிலே அவர் நிறைந்து நின்ருர் என்னும் நெறியாலேயே ! 2. நன்றி நிலை நன்மை கினைக்குணர்வே நன்றி! நலன்மறத்தல் இன்மைக் கிலக்காக்கும் எஞ்ஞான்றும் ; - முன்மைநலம் ஒன்றன்ருே பின்மைநிலைக் கூற்ருகும் என்றுணரார் அன்றன்ருே உய்வர் அறிந்து ! 67 பொழிப்பு : பிறர் செய்த நன்மைகளே என்றும் நிலைத் திருக்கின்ற தன்மையே நன்றியாகும். அவர் செய்த நன்மை களே மறந்து விடுதல் ஒருவரை எப்பொழுதும் ஒன்றுமில்லாத நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விடும். அவர்பால் முன்னர் தாம் பெற்ற நலன் ஒன்றுதானே தம் பின்மை ஊற்றுப்போல் அமைந்தது என்று உணராதவர் அந்நன்றி மறந்து இடருறும் அன்றைக்கன்ருே மீண்டும் அதனை நினைந்து 妲.艇j份郡”,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/90&oldid=758263" இலிருந்து மீள்விக்கப்பட்டது