பக்கம்:உலகியல் நூறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் . ఙ" 3. நாண் శ్రితాఖ அல்லவைக்கு நாளுதார் அ.தான் றடிப்படுக்கும் இல்லவைக்கு நாணுதலென் ஏங்கியே - நல்லவைக்கே உள்ளுவப்பார் என்றும் உகுக்கார்காண் ; ஒவ்வாத கள்ளுவப்பார் காய்மோ களி ! 68 பொழிப்பு : தாம் செய்யும் நன்மை யல்லாத செயல் களுக்கு நாணுதவர், அவை அமைந்து அடிநிலேப்படுத்தும் வறுமை நிலேக்கு மனம் வருந்தி நாணுவது என்ன பயன் தரும் ? நல்லனவற்றுக்கு உள்ளம் விரும்புகின்றவர்கள், என்றைக்கும் அல்லனவற்றைச் செய்ய நாணுகின்ற தன்மை யைக் கைவிட மாட்டார்கள். தமக்குப் பொருந்தாத கள் குடியால் உள்ளம் மகிழுவார், அதனேக் குடிக்கும் பிறரை வெறுப்பார்களோ, வெறுக்கார் என்க. 4. முறை செயனிலே விசும்புவளி தீநீர் விரிகிலமென் றைந்தும் பசும்புல்லோ டுழ்க்கும் பயனும் - இசும்பின்றி எய்துவித்தல் காத்தல் இழுக்கின் தடிந்துமுறை செய்துவித்தல் ஆள்மைச் சிறப்பு. 69 பொழிப்பு : விசும்பும் வளியும் தீயும் நீரும் அவற்ருல் விரிந்த நிலமும், அவை ஐந்து பூத நிலைகள், பசும்புல் முதலியவற்ருல் உகுக்கின்ற பயன்களும், வழுக்கலின்றிப் பெறுவித்தலும், அவ்வாறு பெறுவதைச் சிதைக்கும் நில களினின்று காத்து நிற்றலும், அந்நிலைகளில் தவறுகின்ற வரைத் தண்டித்து முறை செய்தலும் அரசாளுமையின் சிறப்பு ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/91&oldid=758264" இலிருந்து மீள்விக்கப்பட்டது