பக்கம்:உலகியல் நூறு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. உலகியல் நூறு 2. శ్రీక్షి ருள் HHN அருளென்ப துள்ளத் திறைமையது பெற்ருர்க் கிருளில்லை எஞ்ஞான்றும் என்ப - கருள்மனத்தர் அன்பறியார் என்றும் அருளறியார் ஆழ்ந்தகன்ற இன்பறியார் ஏந்தும் இடர். 72 பொழிப்பு : அருள் என்பது உள்ளத்தின் இறைமை நிலே. 泾、 அந்நிலை வரப்பெற்ருர்க்கு உலகியலான் கவிழும் இருள் நிஇலகள் எந்நிலையிலும் படிவதில்லை என்பர். உலகியலில் மூலதிலேகளேத் தெரிந்துணராத கரிய மனத்தை உடை புவர்கள் அன்பையே உணர மாட்டாதவர்கள். ள்னவே அத்தகையவர்கள் என்றைக்கும் அருளே உணர வியலாத வர்கள். ஆகலில்ை, ஆழம் உடையதும் அகற்சியுடையது ഥ?ങ്ങ് இன்பதிலேகளே அவர்கள் உணர வியலாது. உலகியல் துன்பங்களேயே அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டி யிருக்கும். 3. அைைவு திலே இடர்கிலை என்றும் இயல்பன்று யார்க்கும் படர்துயர் உண்டதுவே பான்மை - தொடர்துயரம் உற்ருரும் பின்ன உயர்வெய்தும் உள்ளமைவு பெற்ருருக் கின்பம் பெரிது. 73 பொழிப்பு : உலகியலான் வரும் துன்ப நிலே என்றுமே இயல்பாக இருப்பது அன்று. பிறவியுற்ற எத்தகையார்க்கும் அவ்வந்திலேயான் படர்கின்ற துயரம் உண்டு. அதுவே இயற்கைத் தன்மையாம். தொடர்ந்த துன்பங்களே அடையப் பெற்றவர்களும் பின்ைெருகால் அவை நீங்கி மேம்பாடு அடைவர். எனவே அத்துன்பங்கள் வருமிடத்து, அவை நீங்குதல் உறுதி என்று உள்ளம் அமைந்திருக்கப் பெற்ற வர்க்கே இன்பதிலே அளவின் மிகுதியாகும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/94&oldid=758267" இலிருந்து மீள்விக்கப்பட்டது