பக்கம்:உலகியல் நூறு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 45 4. மான நிலை மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான் இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி - இனவுயர்ச்சி உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக் கொள்ளுவார்க் கில்லை குணிவு. 74 பொழிப்பு : மனம் உயர்ந்து நின்ற நிலைக்குத் தாழ்ந்து போகும்படி வருகின்ற சூழலில் ஒருவர்க்குத் தோன்றுகின்ற நல்லுணர்வே மானம் என்பது. அம்மான உணர்வுதான் தாம் தோன்றிய உயிர்க்கூட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்ற ஒரு மனவெழுச்சியாகும். ஆனல் தாம் சேர்ந்த உயிர்க் கூட்டத்தின் நிலையை மேன்மேலும் உயர்த்த எண்ணுகின்ற வர்களுக்கு, தம் தனிநிலேத்தாழ்ச்சியால் தோன்றும் உயர்ந்த மான உணர்ச்சி இல்லேயாகும். அவ்வினத்தை உயர்த்து தலேயே தம் வாழ்வாகக் கொள்ளுபவர்க்கோ, தம் தனிநிலை மானங் கருதாத நிலேயால், தலேக்குனிவு ஏற்படுவதில்லே என்க. 5. தொண் டு நிலை தோய்ந்தார்ப் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர் வாய்ந்தார் துணிவின் வயப்படுக- ஆய்ந்துரைக்கின் துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை இன்யென்பார் ஆற்றல் இனிது. - - 75 பொழிப்பு: தம்முடன் பொருந்தப் பெற்றரின் கரணியமாகத் தாம் வாழ்வில் உழைப்பதையே தொண்டு என்பர். இவ்வாழ்க்கைக்குரிய வகையில் உள்ளச்சீர்மை வாய்க்கப் பெற்றவர்களே துணிந்து அதன்பால் ஈடுபடுக. ஆராய்ந்துரைப்பதாயின், துன்பத்தையும், இழப்பையும் இழிவையும், துணையில்லாமையையும், சோர்தல் இல்லாமை யையும் இன்பம் என்று கொள்ளுபவர்கள் இதனை ஆற்றுதல் அவர்களின் உயிர்க்கு உவப்புடைய தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/97&oldid=758270" இலிருந்து மீள்விக்கப்பட்டது