பக்கம்:உலகியல் நூறு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இறப்பியல் 1. நிலேயாமை நிலை புறத்துப் புதுமை அகப்பழமை போற்றல் துறத்தல் உயிரியல்பு தோன்றல் - பிறத்தலென்ப ஒன்றெய்த வொன்றழியும் உண்மை கிலையாமை என்றுமுள தோற்றம் இறப்பு ! 76 பொழிப்பு : புறத்தே புதுமை என்று சொல்லப் பெறுவன எல்லாம் அகத்தே பழைமை யுடையனவாகவே இருக்கும். தாம் புதிதாகக் கண்டு கொண்ட ஒன்றைப் போற்றுவதும், பின்பு அதனைத் தவிர்ப்பதும், உயிர்களின் அறிவு வளர்ச்சிக் குற்ற இயல்பான தன்மையாகும். மறைந்திருக்கும் ஒன்று வெளிப்படத் தோன்றுவதே பிறப்பு என்று சொல்லப் பெறு கின்றது. ஒரு பொருள் புதிய ஒரு தோற்றம் பெறுகையில் பழைய தோற்றம் அழிகின்றது. எனவே எந்த ஒரு தோற்றத்திலேயும் நிலத்து நில்லாத - தன்மை (அல்) நிலேயாமை - என்பது பொருள்களின் உண்மைத் தன்மை யாகும். வெளிப்படும் அனேத்துத் தோற்றங்களும் அவற்றின் மறைவுகளும் என்றும் உள்ளவையே ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/98&oldid=758271" இலிருந்து மீள்விக்கப்பட்டது