பக்கம்:உலகியல் நூறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 47 2. பொருளிைலே ஆற்றலொடு மூலம் அளவின் அறக்கலந்து மாற்றுருவங் கொள்ளல் பொருளென்ப - காற்றுருவாய் கிற்கும் கணக்கும் கிலத்தும் விசும்பிடத்தும் ஒற்கமுற் றேயும் ஒளிர்ந்து. பொழிப்பு : ஆற்றல் மூலப்பொருளுடன் பல்வேறு வகை யான அளவில் இரண்டறக் கலந்து, வேறுவேறு வடிவங்கள் எய்தப் பெறுவதே பொருள்கள் என்று கூறப்பெறுகின்றன. கட்புலனுக்குப் புலப்படாவண்ணம் காற்றுப்போல் உருவமற்ற நிலேயில் நிற்கின்ற அவ்வாற்றலும் மூலமுமாகிய பொருள்களே, கண்ணுக்குப் புலப்படும் கனத்த உருவங்களாக நிலத்தின் கண்ணும், விசும்பிடையிலும், விளங்கித் தோன்றி யிருந்து பின்னர் மீண்டும் உருவமற்று எங்கேனும் ஓரிடத்தில் அமைதி யாக ஓய்ந்திருக்கும் நிலையை எய்துகின்றன. 77 3. ஆற்றல் நிலே அற்ருலும் ஆற்றல் அழியாது மற்ருென்ருய் உற்ருலும் ஆங்கதுவாய் உள்ளுயிர்க்கும் - வற்ருத ஊற்ருய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய் ஆற்றல் நிகழ்த்தும் அலைவு 78 பொழிப்பு: பொருள்களில் பொருந்தி யிருந்து இயங்கிய நிலையைத் துறந்தாலும் ஆற்றல் என்றும் அழியாதாம். இனி, வேறு பொருளுருவில் கலந்து புதுப்புறத் தோற்றம் கொண் டாலும், ஆங்கு, அந்தப் பொருளின் உள்ளிருந்து அந்த ஆற்றல் இயங்கும். உலகமாகவும், ஒளி பொருந்திய கதிர் களாகவும், அளவிடப் பெருத விசும்பாகவும் உள்ளன யாவும், என்றும் வடியாமல் ஊற்றுப்போல் இருந்து கொண் டிருக்கின்ற ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/99&oldid=758272" இலிருந்து மீள்விக்கப்பட்டது