பக்கம்:உலகு உய்ய.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். (674)

என்னும் திருக்குறட் பாவால் தெளியலாம். எனவே, எந்த வேலையிலும் காலத் தாழ்ப்பு கூடாது.

கெடும் இயல்பினரின் இரண்டாவது அணிகலன் மறதியாகும். வேலையை நினைவில் வைத்துக் கொண்டே காலங் கடத்துபவர்களைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வேலையை அறவே மறந்து விடுபவர்களை மன்னிக்கவே முடியாது. மறந்தவர்கள் மடிந்தவர்க்கு ஒப்பாவர்.

கெட்டழியவரின் மூன்றாவது அணிகலன் மடி (சோம் பல்) ஆகும். சோம்பலின் பொல்லாமையைப் பற்றித் திரு வள்ளுவர் பத்துப்பாடல்களில் தெரிவித்துள்ளார். மடி குடியையே (குடும்பத்தையே) அழித்து விடும் என்று கூறி யுள்ளார். உரிப்பதற்குச் சோம்பல் கொண்டு வாழைப் பழத்தைத் தின்னாமல் வைத்திருக்கும் 'வாழைப்பழச் சோம்பேறிகள்' சமுதாயத்தில் மிக உளர். சமுதாயத்தின் சாபக் கேடான இவர்கள் சவக்குழியில் கிடக்கவேண்டிய வர்களாவர்.

கெடுநீராரின் நான்காவது அணிகலன் பெருந் தூக்க மாகும். சிலர், நிலைத்த தூக்க மாகிய சாவுக்குப் பதில், உயிரை வைத்துக் கொண்டே நெடுந்தூக்கத்தில் இருப்பர். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் எந்த நேரத்தில் எங்கே படுத்தாலும் இவர்கள் உடனே உறங்கிவிடுவர். கோடை வெயிலிலே - நண் பகலிலே- மிளகாய் அரைக் கும் பொறியின் பக்கத்தில் இவர்களை விட்டாலும், நின்ற படி இவர்கள் நெடுந்தூக்கம் தூங்கினும் வியப்படைவதற் கில்லை, இவர்கள் - இல்வை யில்லை - இவைகள் கவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/107&oldid=1279588" இலிருந்து மீள்விக்கப்பட்டது