பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

யிருந்தது. அவைதான் நான் என்று சொல்லும்படி என் வாழ்க்கையிலே ஒரு பகுதியாகி விட்டன!” என்றார் ஷா.

அவள் அத்துடன் நிற்கவில்லை. “அதுசரி. நீங்கள் பரமண்டலத்திற்குச் சென்று, கடவுள் முன்பு நிற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்களில் அவர் எதற்கு அதிகமாக மார்க்கு கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்?’ என்று மீண்டும் கேட்டாள்.

‘கடவுள் மாத்திரம் என் செயல்களுக்குப் பரீட்சை மார்க்கு கொடுக்க ஆரம்பிப்பாராளுல், அப்புறம் அவருக்கும் எனச்கும் பெரிய தகராறுதான் வந்து விடும்!” என்றார் ஷா!

சித்ரகுப்தன் வமிசம்

சென்னையில் சுவாமி விவேகாநந்தர் தங்கியிருந்தார். பல்லாயிரக் கணக்கில் சுவாமிஜியைத் தரிசிக்கக் குழுமி யிருந்தனர்.

அக்கூட்டத்தில் ஒரு பண்டிதர் எழுந்து, “நீங்கள் பிறப்பில் பிராமணர் அல்லவென்று அறிகிறேன். அப்படி இருக்க, சாஸ்திரப்படி நீங்கள் சந்யாசம் வாங்கிக் கொள்வது தவருயிற்றே” என்று கேட்டார்.

‘நான் சித்திரகுப்தனின் வமிசத்தில் வருபவன். ஒவ்வொரு பிராமணனும் தனது சந்தியாவந்தனத்தின்போது சித்திரகுப்தனைப் பிரார்த்தனை செய்கிருன். ஆகவே, பிரா மணன் சந்யாசம் பெறுவதற்குத் தகுதியுள்ளவன் என்றால், பிறகு, நானும் தகுதியுள்ளவனே!” என்றார் சுவாமிஜி. பிறகு ‘அதுசரி. நீங்கள் இப்போது என்னிட்ம் சம்ஸ்கிருதத்தில் பேசினீர்களல்லவா? அ தில் ஏராளமான உச்சரிப்புப் பிழைகள் இருந்தன. வடமொழி இலக்கண்வாதி பாணினி சொல்லியிருக்கிருன், சம்ஸ்கிருதி வ்ார்த்தைகளைத் தவருக உச்சரித்துக் கீழ்மைப்படுத்திவிடக் கூடாது’ என்று. எனவே, நீங்கள் இந்தச் சர்ச்சையைத் தொடர அருகதை இழந்தவர்” என்றார். . w

பண்டிதரின் முகத்தில் அசடு வழிந்தது!

குழந்தை லால்பகதுர்

அலகாபாத்தில் ஒரு பெரும் திருவிழா.

கங்கையில் புனித நீராடி, கடவுள் தரிசனம் செய்து கொண்டு இருந்தப்ோது, த்ர்யின் இடுப்பிலிருந்து மெல்ல இறங்கி நழுவி கூட்டத்தில் எங்கோ சென்று விட்ட்து அந்தக்