பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

குழந்தை. அதற்கு அப்போது மூன்று வயசுதான் ஆகி யிருந்தது.

தரிசனம் முடிந்து, தன் நினைவு அடைந்த தாய் குழந்தையைக் காணுமல் துடித்தாள்; பதறினுள். கங்கா தேவிக்குக் குழந்தை காணிக்கை ஆகியிருக்குமோ என்று கதறினுள். எங்கும் தேடினுள். கடைசியில் ஒர் ஆட்டிட்ை யனிடம் ஒரு குழந்தை இருப்பதாகக் கேள்விப்பட்டு ஓடினுள். அக்குழந்தைதான் அவள் பெற்ற மகன். சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

தாய் அடைந்த ஆனந்தத்துக்குக் கரை ஏது?

அக் குழந்தைதான்...... தாஷ்கண்ட் சமாதானக் காவலர் அமரர் லால்பகதூர்!

ராவ்பகதுர்

செட்டி நாட்டரசர் வள்ளல் அண்ணுமலைச் செட்ன். யாருக்கு ராவ்பகதூர்’ என்ற பட்டம் கிடைத்தது ஒரு ஒரு ரசமான விஷயமாகும்.

அக்காலத்தில் செட்டி நாட்டின் சிற்சில பகுதிகளில் கள்வர் நடமாட்டம் கூடியிருந்தது. அச்சமயம், குதிரை மூலமே தபால் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது.

1911 கடைசியில் ஓர் இரவு தபால் வண்டி திருமயத்திலிருந்து காணுடு காத்தானே நோக்கி வந்தபோது, அஞ்சல் பைகளைச் சூறையாடினர் திருடர்கள்.

இதை அறிந்த செட்டியார் உடனே திருடர்களைத் தேடிக் கண்டு பிடித்தார். அஞ்சல் பைகளை மீட்டார்.

இத்தீரமிகு செயலைப் பாராட்டிய மாகாண அஞ்சல் நிலையத் தலைமையதிகாரி, செட்டியாருக்கு ராவ் பகதுர்’ பட்டம் கொடுக்கும்படி வெள்ளையர் அரசாங்கத்துக்குக் குறிப்பு அனுப்பினர். - . -

அண்ணுமலைச் செட்டியார் ராவ்பகதுர்’ ஆனுர்!

குருதேவர் சான்று

குருதேவர் ரவீந்திரநாத் தாகூர் தம்மிடம் நற்சான்றிதழ்

கேட்க யார் வந்தாலும் மறுக்காமல் கொடுத்து வந்தார்.

அவரது அந்தரங்க ந்ண்பர் ஒருவர் தாகூரிடம் இது பற்றிக் கேட்டார். எதற்கெடுத்தாலும் நீங்கள் சர்டிபிகேட் கொடுத்தால் நன்றாயிருக்குமா?’ என்று வினவினர்.