பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

Iあ

பயணப்பட்டான். மாடு மேய்ப்பவளுக இருந்தான். உழைத் தான்; காலம் ஓடியது. உடல் வலு ஏறியது. உலகப் புகழ் பெற்ற மைக் டொனவான் எனும் மல்யுத்த வீரனுடன் மல் புத்தம் செய்தான்.

அவன்தான் தியோடர் ரூஸ்வெல்ட்! அதே தியோடர் ரூஸ்வெல்ட்தான் அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க ஜனதிபதியாகவும் ஆனுர்.

1912-ஆம் வருஷம். ‘புல் மூஸ் பிரசாரம் நடந்து கொண்டிருந்த நேரம். அவர் அவசரமாகக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு பேராசை பிடித்த மனிதன் அசம்பாவிதமாக ரூஸ்வெல்டின் மார்பில் சுட்டு விட்டான். குண்டு அடிபட்டு விட்டது என்கிற விவரத்தை யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர் பேச்சை நடத்தி முடித்தார். ரத்தம் தன் போக்கில் ஒழுகிக் கொண்டேயிருந்தது. கடைசியில் பேசி முடிந்ததும்தான் அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அப்புறம்தான் விவரம் மற்றவர் களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின் ஒரு தருணம்:

அப்போது ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகையிலிருந்து பிர சித்தி பெற்ற வாஷிங்டன் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு “டெலிபோன்’ செய்தார்; உடனே மாளிகையின் நிர்வாக மண்டபத்துக்குப் புறப்பட்டு வரும்படி செய்தி சொன்னுர்.

நிருபருக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. யாருக்குமே அளிக்காத பிரத்யேக பேட்டி இது என்று ஊகம் செய்தார். ஏதோ அவசரமான அரசியல் விஷயமாகவே இருக்க வேண்டு மென்றும் நிர்ணயம் செய்தார். ஆகவே, இதுபற்றிய பிரத் யேக வெளியீடு ஒன்றை உடனடியாக அச்சிட்டு வெளியிட வேண்டு மென்பதற்கு அடையாளமாக அப்பத்திரில்ை நிறுவ னத்துக்கு ஒரு தந்தியும் கொடுத்தார் அந்நிருபர். - ருபர் வெள்ளே மாளிகையை அடைந்ததும், ரூஸ்வெல்ட் அவரை வரவேற்று, தம் மாளிகைத் தோட்டத்திலிருந்து ஒரு பழைய மரத்தை நோக்கி அழைத்துச் சென்று, தாம் கண்டு பிடித்த ஆந்தை ஜோடி ஒன்றை வெகு ஆர்வத்துடன் காண்பித்தாராம்! . . . . . -

  • \,

உலகப் புகழ்பெற்ற மேடை நாடகம் எது என்றால், எல்லோரும் ஒருமுகமாக ஹாம்லெட்டைத்தான் குறிப், பிட்டுச் சொல்லுவார்கள். - ---