பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

ஆனல், அதையடுத்து, இரண்டாவது மரியாதையைப் பெறும்-பெறவல்ல நாடகம் எது என்றால், அது கட்டாயம் ‘மழை என்ற நாடகமாகத்தான் இருக்கும்.

“சாடி தாம்ஸன்’ என்று ஒரு சிறுகதை எழுதினர் ஸாமர்ஸ்ட் மாம்.

ஒருநாள், அவர் நண்பர் ஜான் கால்டன் அவர் வீட்டில் விருந்தினராக வந்திருந்தார். இரவில் தூக்கம் வரவில்லை என்று, தூக்கம் வரும்வரை படிப்பதற்கு ஏதாவது கேட்டார். மேற்கண்ட கதையின் அச்சுப்படிகளைக் கொடுத்தார் மாம்.

அதைப் படித்தார் நண்பர். அது அவருக்குப் பிடித்து விட்டது. சிறப்பான நாடகமாக்கலாமென்று கருதினர். அவ்வாறே செய்யவும் செய்தார். அதுதான் மழை"!

இதற்காக ஐந்து நிமிஷம் கூட செலவழிக்க வில்லை மாம். ஆனல், அதன் மூலம் அவர் சம்பாதித்தது இரண்டு இலட்சம் பவுன்களாகும்!

ஞானியின் முடிவிலே!

ருஷ்யச் சரித்திரத்திலே என்றும் நிலைத்திருக்கும் பெயரும் புகழும் பெற்ற மேதை லியோ டால்ஸ்டாயைப் பற்றியும் அவரது கருத்துக்கள், எழுத்துக்கள் ஆகியவை பற்றியும் பத்திரிகைகளிலும் உதிரியாக நூல் வடிவிலும் வந்த கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை 56,000, புத்தக வடிவு கொண்டவை 23,0001-2,300 அல்ல!

தத்துவ ஞானி டால்ஸ்டாய் எழுதியவை 100 தொகுதிகள். இதுவரை அம்மாதிரி யாரும்ே எழுதியதில்லை. அவர் இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்றிருந்தாலும், அவரது சொந்த வாழ்வு ஒரு தோல்வியே யாகும். -

அவர் ஆடம்பரத்துக்கு எதிரி. அவரது மனைவியோ ஆடம்பரத்துக்கு அடிமை. அவரை அவள் திட்டினுள்; ஏசிளுள். - அவ்வீடு அவருக்கு ஒரு பாழ் நரகமாகவே தோன்றியது. ஆகவே, அவர் தமது புதிப்பாளர்களிடம் ராயல்ட்டி-சம் மிானம் கொடுக்காமலேயே தம் நூல்களைப் பிரசுரம் செய்யும் படிகூட தூண்ட வேண்டியவராளுர்.

அவளை அவர் எதிர்த்தபோது, அவளுக்கு “ஹிஸ்டீரியா வந்து விட்டது. அவள் துடித்தாள்: நலிந்தாள்.

அப்போது, அவர் அவளைப் பற்றி தம் டைரியில் எழுதி வைத்திருந்த பழைய காதல் மொழி விளக்கங்களை அவளுக்கு

ஐம்பதாண்டுகள் கழித்து வாசித்துக் காட்டினர்.