பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17

இறுதியில் இருவருமே விம்மித் துடித்தார்கள்.

1910 அக்டோபர் 21-ல் மனைவியின் கொடுமைக்கு அஞ்சிய டால்ஸ்டாப் வீட்டைத் துறந்து வெளியேறினர். பதினொரு நாள் கழித்து, ஒரு ரயில் நிலையத்தில் ஏழை உழவர் களின் சூழலில் நிமோனியா காய்ச்சல் கண்டு இறந்தார்!

சிந்தனையும் மூளையும்!

பிரபலமான அமெரிக்க ஆசிரியர் மார்க்ட்வைனின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விட்ட சின்னஞ்சிறு சம்பவம் அது. -

ஒருநாள்:

பழைய கடுதாசிக் கிழிசல் ஒன்று அவர் பார்வையில் பட்டது. அதை எடுத்துப் படித்தார். அது ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய வரலாற்று நூலினின்றும் கிழித்து எறியப் பட்டிருந்த காகிதம். அதைப் படித்தார். அதில் ஆர்க் நாட்டின் ஜோன் ரூவான்கோட்டையில் கைதாகி அடைக்கப் பட்டிருந்த விவரம் இருந்தது. அந்த வீராங்கனையைப் பற்றிய முழுக் கதையையும் தே டத் தேடிப் படித்தார். அவளது சுதந்திர வேட்கையும் நாட்டுப் பற்றும் அவரைக் கவர்ந்தன. - நாற்பத்தாறு ஆண்டுகள் கழித்து மார்க்ட்வைன் அந்தப் புரட்சித் தலைவி ஜோனப் பற்றிச் சிறப்பானதொரு புத்தகம் எழுதினர். ஜோனேப் பற்றிய நினைவுகள்’ என்பது நூலின் பெயர். --

விமரிசர்கள் அந்நூலை அவ்வளவு போற்றவில்லை. ஆனலும் அதைத்தான் அவர் தமது தலைசிறந்த படைப் பாகக் கருதினர்!

அவரை ஒரு இளம் விஞ்ஞானி அலக்ஸாண்டர் க்ரஹாம் என்பவர் சந்தித்தார். டெலிபோன் கருவி கண்டு பிடிப்பில் கொஞ்சம் முதலீடு செய்யும்படி மார்க்ட்வைனிடம் அவ்ர் கேட்டுக் கொண்டார். ஒரு கம்பி மூலம் வீட்டிலிருந்த படியே வெகு தொலைவுக்கு நண்பர்களுடன் பேசலாம் என்றார் கண்டுபிடிப்பாளர். - w

. இதைக் கேட்டு ட்வைன் விழுந்து விழுந்து சிரித்தார்.

ஆனல், அப்போது அந்த விஞ்ஞானியின் இஷ்டப் பிரகாரம் கொஞ்சம் முதலீடு செய்திருந்தால், கொஞ்சகாலத் திற்குள் அவருக்கு விலைமதிப்பிட முடியாத பொருள் கிட்டி யிருக்குமல்லவா?

உ.-2