பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

நிருபா சர்டு

1937ஆம் ஆண்டு மந்திரிசபை ஏற்பதா, இல்லையா என்ற வாதம் காங்கிரஸ்காரர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது. அவ்வமயம் காந்தி அடிகள் ஹிந்தி சாகித்ய சம்மேளனத் துக்காகச் சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார். யாரோ ஒரு நிருபர் காந்திஜியிடம் வந்து வெகு ஆவலுடன், ‘காங்கிரஸ்காரர்கள் மந்திரிசபை அமைத்து, மந்திரிப் பதவி ஏற்று விடுவார்களோ?’ என்று வினவினர்.

“ஆம்” என்றாே அல்ல” என்றே பதில் சொன்னுல், ஒரே வினு டியில் உலக மெல்லாம் இச் செய்தி பரவிவிடும். மெளன மாக இருந்தால் கூட அதற்கும் ஒரு வியாக்யானம் செப்து விடக்கூடியவர்கள் இந்தப் பொல்லாத நிருபர்கள்.

ஆகவே காந்திஜி வெகு சாதுரியமாக, ஏன்? நீர் ஒரு மந்திரியாகப் போகிறீரோ?” என்று கேட்டார்.

உடனே எல்லோரும் கொல் லென்று சிரிக்கவே, நிருபர் மறைந்து விட்டார், அங்கிருந்து!

மரியாதை லிவு

அணுசக்தி விஞ்ஞானத் துறை மாமேதை டாக்டர் பாபாவின் ட்ராம்பே அணுசக்தி நிலையம் அன்னரது மறை வுக்காக மூடப் பெறவில்லை.

அதற்குரிய காரணம்:

‘எவரது மரணமும் ட்ராம்பே அணுசக்தி நிலையத்தின் வேலைகளைத் தடைப் படுத்தக்கூடாது என்று டாக்டர் பாபா சில தினங்கள் முன்புதான் சொன்னர். அவருடைய இறுதி ஆசையைப் பூர்த்தி செய்வதே நாங்கள் அன்னருக்குக் காட்டும் மரியாதை எனக் கருதுகிருேம்.

இங்கிலீஷ் பேசத் தெரியாத குழந்தை!

திக்கித் திக்கிப் பேசிய குழந்தை-இங்கிலிஷ் பேசத் தெரியாமல் திண்டாடிய அக் குழந்தை பிற்காலத்தில் பிரபல மான எழுத்தாளராக உயர்ந்தான் என்றால் அதிசயமாக இருக்கிறதல்லவா? 么 -

கவ்ாசப் பையில் ஏற்பட்ட கோளாறுகளுக்காக வைத்தியச் சிகிச்சை பெறப் போனவனுக்கு வைத்தியத் தொழிலில் மோகம் பிறந்து, அவனே டாக்டராகி, அதே நேரத்தில் கதைகளையும் எழுதி வந்தான் என்றால் இதுவும் விந்தையாகத் தோன்றுகின்ற தல்லவா?