பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

செருப்பைத் தேடி

அண்மையில் நூற்றுண்டு விழா கொண்டாடிய வங்கப் பிரமுகர் ஆசுதோஷ் பஞ்சாப்-கல்கத்தா ரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவ்வகுப்பில்-முதல் வகுப்பில் ஒர் ஆங்கில ராணுவ அதிகாரியும் இருந்தார். இவருக்கு ஆசுதோஷ் தோற்றம் புதுமையாகப் பட்டிருக்க வேண்டும்.

ஆகதோஷ் செருப்பு, வேட்டி சட்டையுடன் விளங்கினர். இரவில் ஆசுதோஷ் உறங்கிக் கொண்டிருக்கையில், அவரது செருப்புக்களை ஒன்சைப் படாமல் எடுத்து வெளியே வீசி விட்டார் அந்த ஆங்கில ராணுவ அதிகாரி. ஆசுதோஷ் விழித்தப் பார்த்தார், விவரம் புரிந்தது.

ஆங்கில ராணுவ அதிகாரி முகம் கழுவச் சென் ருர், அப்போது, அவனது தொப்பியை எடுத்துச் சுழற்றி வண்டிக்கு வெளியே வீஇ விட்டார் ஆ. சுதோஷ். திரும்பியவன் “எங்கே என் தொப்பி’ என்று பதட்டத்துடன் வினவிஞன். ‘அது என் செருப்பைத் தேடிக் கொண்டு போயிருக் கிறது!’ என் ருர் அவர், அமைதியாக!

தமிழ்நாட்டுக் காமராஜ்

நேரு குடும்பத்திடம் தலைவர் காமராஜ் அவர்கட்கு நிரந்தரமான அன்பும் பாசமும் விசுவாசமும் எப்போதும் உண்டு.

அதேபோல, காமராஜரிடம் நேரு குடும்பத்துக்கும் அன்பு உண்டு.

ஒரு சமயம், - * .

நேருஜி உதகையில் தங்கியிருந்தார். அவரிடம் சில காங்கிரஸ் தலைவர்கள் சென்று, மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்குத் காரணமூலர் காமராஜ்-என்று குற்றப்பத்திரிகை படித்ததைக் கேட்டுக் கொதித்தார் நேருஜி. - . , ,

‘இப்போதே எல்லாரும் வெளியேறிவிட வேண்டும். காமராஜ் இல்லையேல், சென்னையும் மற்றாெரு உத்தரப் பிரதேசமாக ஆகியிருக்கும். தமிழ்நாட்டைக் காப்பாற்றி வருபவரே காமராஜ்தான்!” என்று சீறிஞராம் -