பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

புத்த இம்சை

ஜீவ ஹிம்சையே கூடாது என்று புத்தர் பிரான் உபதேசித்திருக்கிறார். ஆனல் புத்த மதத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு பர்மாக்காரனுக்கு மீன் பிடிப்பதில் ரொம்ப ஆசை. ஆகையால் அவன் ஒரு யுக்தி;செய்தான்.

ஒரு மரக்கட்டையை எடுத்தான் வெள்ளை வர்ணம் பூசினன். அதன்பின் அதை ஆற்றிலே தண்ணிரில் கரை யோரமாகப் போட்டான். மீன்கள் அதைக் கண்டு,

என்னவோ ஏதோவென்று பயந்து துள்ளி மணலிலே வந்து விழுந்து மாண்டன. மீன்களைப் பொறுக்கிப் பொறுக்கி பையிலே நிறைத்துக் கொண்டான் அந்தப் பர்மியன்.

‘இப்படிக் கொலை செய்யலாமா?’ என்று அவனை நண்பர் கேட்டார்.

‘நான் எங்கே கொலை செய்கிறேன்? அவை தற்கொலை செய்து கொள்கின்றன. அப்படித் தற்கொலை செய்து கொள்பவற்றை நான் பொறுக்கிக் கொள்ளுகிறேன். இவ்வளவுதானே??? -

ராவ் கதை

ஐ. நா. சபையில் ஒரு சமயம் நிகழ்ச்சி முறை பற்றிப் பலத்த வாதங்கள் நடந்தன. அதைக் கண்டு சகிக்காமல் சர் பி. என்; ராவ் இந்தக் கதையைச் சொன்னர்;

இந்தியாவில் ஒரு அரசர் இருந்தார். அவரைக் கால் பந்தாட்டம் ஒன்றைப் பார்க்க அழைத்துச் சென் ருர்கள். ஆட்டத்தில் வெற்றி பெற்ற கோஷ்டிக்கு ஆளுக்கு ஒரு கால் பந்து வீதம் அந்த அரசர் அடுத்த நாள் இனமாக அனுப் பினர். அவர் கூடவே இப்படி ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘ஒரே பந்துக்காக நீங்கள் பதிஞேரு பேரும் அப்படிச் சண்டை ப்ோட்டது எனக்குப் பிடிக்கவில்லை. அதஞலேயே இவைகளை அனுப்பினேன்!”

ஆனல் இங்கே இருக்கிருேமே, பதினுேரு பேர், நம் எல்லோருக்கும் ஒரு சமயத்தில் ஒரு பந்து போதும் என்றே நினைக்கிறேன். அதாவது ஒரு சமயத்தில் ஒரே ஒரு தீர்மா னத்தைப் பற்றி மட்டும் விவாதிப்போம்! - -

பைரனின் மூடநம்பிக்கை

என்றென்றும் நினைவில் தங்கும் காதற் பாக்களைப் பாடிய பெருங்கவிஞர் பைரனுக்கும் சில மூடநம்பிக்கைகள்