பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23

ஞாபக மறதி

விஞ்ஞான மேதை எடிசன். ஒரு சமயம் பாஸ்டன் நகரத்துப் பெண்கள் பள்ளிக் கூடத்தில் மின்சாரம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்ற இணங்கியிருந்தார்.

ஆல்ை, குறித்த நேரத்தில் அவர் அங்கு வந்து சேர

நேரம் கழிந்து கொண்டேயிருந்தது. எடிசனத் தேடிக் கண்டுபிடிக்க பலர் புறப்பட்டார்கள். பல இடங்களில் அவரைத் தேடிப்பார்த்தும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடைசியில் அவர் நண்பர் ஆடம்ஸ் அவரைக் கண்டு கொண்டார். ஒரு வீட்டின் உச்சியில் எடிசன் உட்கார்ந் திருந்தார். அவர் அங்கு தந்திக் கம்பி அமைக்கும் அலுவலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்.

பெண்கள் பள்ளியில் எடிசன் பேசவேண்டும் என்பதை அவரது நண்பர் நினைவூட்டினர்.

‘ஆ மறந்தே போனேன்!...” என்று வருந்தினர். உடன்ே கீழே குதித்தார் எடிசன். நேரே பெண்கள் பள்ளிக் கூடம் நோக்கிப் புறப்பட்டார். வெகு அற்புதமாக உரை நிகழ்த்தினர்.

எதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதுகூட அவர் அங்கு சென்ற பிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. அவரது சொற். பொழிவு எல்லோரையும் வியப்பிலாழ்த்திவிட்டது. வீடு திரும்பும்போதுதான் அவர் தம் உடைகளின் நிலையைக் காண நேர்ந்தது.

நீங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு வந்திருக்கலாம்” என்றார் ஆடம்ஸ்,

‘ஒ...! வாஸ்தவம்தான்! நீங்கள் இதை என்னிடம் முன்கூட்டியே நினைவூட்டியிருக்கலாமல்லவா? என்று வருந்தினராம் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி தாமஸ்

எடிசன்!

தண்ணீர்ப் பிரச்னை

இந் து- முஸ்லீம் ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்ட அண்ணல் காந்தி அடிகள் நவகாளியில் பாத யாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது. so . . . c