பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

எங்கும் தாங்க முடியாத குளிர். ஆகவே காந்திஜிக்கு கால்களைக் கழுவ சுடுநீர் கொணர்ந்து கொடுத்தார் மனுபஹன்.

இதைக் கண்ட காந்திஜி வருத்தம் அடைந்தார். ‘தினமும்

உண்வு தயாரிப்பதற்குக் கூட விறகு இல்லாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கையில், என் கால்களைச் சுத்தப்படுத்த வெந்நீர் தயாரிப்பதற்காக ‘ விறகுகளை வீணடித்து விட்டாயே? இது தவறு? குளிர் ஆல்ை என்ன? கைகால் களைக் கழுவ பச்சைத் தண்ணீர் போதாதா?’ என்றார்,

மனுவுக்கு உண்மை புரிந்ததும் அடிகளிடம் மன்னிப்புக் கோரினர்.

காந்திஜியின் சட்டை

மகாத்மா காந்தி அப்போது ஒரு பள்ளிக்குச் சென்றிருந் தார்.

பாபுஜியைக் கண்டதும் மாணவர்கள் வணக்கம் தெரி வித்தார்கள். சட்டை அணியாமல் இருந்த காந்திஜியைக் கண்டதும், மாணவன் ஒருவனுக்கு அதிசயமாக இருந்தது.

‘பாபுஜி! நீங்கள் சட்டை போட்டுக் கொள்ள மாட்டீர் களா? என் அன்னை அழகான சட்டை தைத்துத் தருவாள். நான் தைத்துக் கொண்டு வந்து தரட்டுமா?’ என்று அன்புடன் கேட்டான்.

காந்திஜி புன்னகை தவழச் சொன்னுர்; எனக்கு 40 கோடி. சகோதரர்கள் இருக்கிரு.ர்கள். எல்லோருக்கும் ஆளுக் கொரு சட்டை வீதம் தைத்துக் கொடுக்க உன் தாயால் இயலுமா? அப்படியென்றால் தான், நானும் சட்டை போட் டுக்கொள்வேன்!” - -

கேள்வி கேட்ட மாணவன் சிந்தனை வசப்பட்டு நின்று விட்டான்! -

பாரதிதாசனுக்கு அடிமை

பாரதிதாசனப் பற்றி உங்களுக்கெல்லாம் நன்?கத் தெரியும். தமிழுக்கும் அமுதென்று பேர்!” என்கிற இந்தப் பாட்டைச் சீனிமாவில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த அழகான பாடலைப் பாடியவர் பாரதிதாசன் தான். எண்பதாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பெறும் நேரமல்லவா? . - . . . . . . . . ‘ஓடி விளையாடு பாப்பா!’ என்று பாடினரே பாரதி அவருக்குத் தாசன் இவர். இவருக்கும் தாசன்மார்கள் உண்டு.