பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

ஒருவர் சுரதா. பாரதிதாசனுடைய இயற்பெயர். சுப்பு ரத்தினம், சுப்புரத்தினதாசன் தான்-சுரதா.

‘தூங்காதே தம்பி. துரங்காதே! என்று பாடிவிட்டு அமர நித்திரை கொண்டு விட்டாரே, பட்டுக்கோட்டை கவிஞர், அவர்கூட பாரதிதாசனை குருவாகக் கொண்டவர் தான்.

புகழேந்தி என்று புதிய் கவி ஒருவர் புரட்சிக் கவியர சரிடம் குருகுலவாசம் செய்தார். அவர் ஒருநாள், என்னிடம் கதை ஒன்று சொன்னுர், பாரதிதாசனைப் பற்றிய கதை அது.

ஒருசமயம், பாரதிதாசன் முடிவெட்டிக் கொள்ளப் போனார். புதிய இடம் ஆல்ை முடிவெட்டி முடிந்ததும் வழித்க மாக வேறு இடத்தில் கொடுப்பது மாதிரி அந்த நாவித ருக்கும் ஒரு ரூபாய் கூலி கொடுத்தாராம். ஆனல் அந்த ஆள் வாங்க மறுத்துவிட்டாராம்.

பாரதிதாசன் ரொம்பவும் பிடிவாதக்காரர் ஆயிற்றே! அவரும் அதற்குமேல் கூடுதலாகக் கொடுக்க விரும்பவில்லை. இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது. அங்கு ஒருவர் வந்தார். ஐயா, வணக்கம்!” என்று வணங்கிர்ை. விவரம் அறிந்ததும், ‘என்னப்பா இது. இவர் தான் பாரதிதாசன்!” என்றாராம், நாவிதரிடம்.

அவ்வளவு தான். அந்த நாவிதர், பாரதிதாசன் பாதங்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டாராம். அத்துடன் நிற்கவில்லை. உடனே ஒடிப்போய், பத்து ரூபா க்கு பழம் முதலியன வாங்கி வந்து பரிசிலாகக் கொடுத்து மகிழ்ந்தாராம்.

அந்த நாளிலே இம்மாதிரிக் கவிகளுக்கு பரிசில் கொடுக்க மன்னர்கள் இருந்தார்கள். இப்போதும் மன்னர்களுக்குப் பஞ்சம் ஏது? நாமெல்லாம் தான் இந்நாட்டு மன்னர்கள் ஆயிற்றே! .

பாரதிதாசன் ஆனந்த மடைந்தாராம். தம் பாடல் களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை நின்ேத் துத்தான் அவர் அப்படி மகிழ்ச்சி அடைந்தாராம்.

அத்தகைய பெருமை கொண்டவர் பாரதிதாசன். அவர் அமரராகி விட்டார். சாகித்ய அகடமி பரிசு இப்போது அவரது பிசிராந்தையார் நாடகத்துக்குக் கிடைத்திருக் கிறது. - - “. . . -

மகாத்மா காந்திக்கு ஜே . . .

குவாலியரில் கிங்கோலி என்னும் இடத்தில் மகாத்மா காந்தி தங்கியிருந்தார். ஒரு சமயம், சுாந்திஜியும், அவரது