பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

நண்பர் ராம் நாராயண் செளத்திரியும் காட்டு மார்க்கமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். சில குடியானவர்களும் பின் தொடர்ந்தார்கள். -

அப்போது நடுக்காட்டில் ஆயுதம் தாங்கிய குடும்ப மொன்று எதிர்பட்டது. உடன் இருந்த குடியானவர்கள் அக்கும்பலேப் புரிந்து கொண்டார்கள். இவர்கள் பயங்கரக் கொள்ளைக்காரர்கள் என்று மெல்லிய குரலில் காந்திஜியின் நண்பரிடம் தெரிவித்தார்கள். மகாத்மாவின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று ராம் நாராயண் செளத்திரி அஞ்சினுர்.

ஆனல் காந்திஜியோ மெளனமாகப் புன்னகையோடு நடந்து கொண்டேயிருந்தார்.

எதிர்ப்பட்ட கொள்ளைக்காரர்கள் இவர்களை நெருங்கி யதும், “மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று கோஷமிட்டு காந்திஜியை வணங்கியபடி விரைந்து சென்று விட்டார்கள்.

சூப்

புகழ் பெற்ற பெவின் பிரிட்டனின் அயல் நாட்டுக் காரீயதரிசியாக இருந்த சமயம் அது.

லண்டனில் இருந்த சீனத் தூதுவர் அவரை விருந்துக்கு அழைத்திருந்தார். ‘எப்போதாவது நீங்கள் சீன நாட்டு உணவைச் சாப்பிட்டது உண்டா?’ என்று கேட்டார்.

ஆமாம், எனக்கு எட்டாம் எண்ணுள்ள உணவு வகை என்றால், நிரம்பப் பிடித்தம்!” என முர் பெவின்.

சீனத்து உணவுக் கடைகளிலே உணவு வகைகளை எண் களில் வரிசையைக் குறிப்பிட்டுத்தான் இனம் பிரிப்பது வழக்கம்.

என்றலும், பெவின் குறிப்பிட்ட எட்டாம் எண் உணவு விவரம் சீனத்துதுவர் டாக்டர் செங்குக்குக் குழப்பம் விளை வித்தது. ஆகவே, ‘உங்களுக்கு கோழிக் கறி, மாமிசம், மீன் வகை இவற்றில் ‘ங்கள் சொன்ன எட்டாம் நம்பர் டிஷ்’ எது?” என்று வினவினர்.

அவர் குறிப்பிட்ட உணவு வகைகளில் தான் குறித்த எட்டாம் நம்பர் டிஷ் எதுவும் இல்லை என்று தெரிவித்தார் பெவின். - -

உடனே சீனத் தூதருக்குப் புரிந்து விட்டது. பெவினுக்கு விருப்பமான எலும்பு சூப்பரிமாறப்ப்ட்டது. அவர் புன்னகை செய்தார். அவர் அதற்கப்புறம் கலந்து கொண்ட எல்லா விருந்துகளிலும் சீன உணவில் பிரசித்தி