பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

2.

பெற்ற சூப் பரிமாறப்பட்டது. இதே சூப், பிரிட்டிஷ் ராணி கலந்துகொண்ட ஒரு பெரிய விருந்திலும் வெகுவாகப் பாராட்டப் பெற்றது! -

அறைகள் எத்தனை

டாக்டர் அழகப்ப செட்டிப்ார் ஒரு வள்ளல் மட்டுமல்ல, ஒர் அதிசய மனிதரும் கூட.

ஒரு சமயம், அவர் பம்பாய்க்குச் சென்றிருந்தார். மேல் நாட்டுப் பாணியில் நடத்தப்பட்டு வரும் ரிட்ஸ் ஹோட்ட லுக்குள் நுழைந்து, தங்குவதற்கு அறை வேண்டுமென்று கேட்டார். -

‘அறை காலி இல்லை’ என்றார் அந்த ஹோட்டலின் நிர்வாகி,

அழகப்பர் விடவில்லை. இந்த ஹோட்டலில் எத்தனை அறைகள் இருக்கின்றன?’ என்று வினவினர்.

‘இந்த ஹோட்டலையே விலைக்கு வாங்கப் போகிறவர் மாதிரி அல்லவா நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்!” என்றார் நிர்வாகி, ஏளனமாகச் சிரித்த படி. - வி “ஆமாம், விலைக்கு வாங்கத்தான் போகிறேன். என்ன - &y?"° -

லட்சக் கணக்கில் ஒரு பெரிய தொகையைச் சொன்னர் ஹோட்டல் நிர்வாகி.

உடனே வள்ளல் அழகப்பர் அந்த மாபெரும் ஹோட்ட லையே விலைக்கு வாங்கிவிட்டார்!

ஆப்பிள் தோல்

ஒரு சமயம், நேருஜியும், கிருபளானியும் இன்னும் சில: அரசியல் தலைவர்களும் விழா ஒன்றில் ஒய்வாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். -

அப்போது நேருஜி ஆப்பிள் பழங்களைச் சீவி தோல்களை வீசிவிட்டு பழத்துண்டுகளை மாத்திரம் ஒரு தட்டில் வைத்துக் கொண்டிருந்தார். -

பண்டிட்ஜி! ஆப்பிள் பழங்களின் தோல்களையெல்லாம் இப்படி வீளுக்கலாமா? அந்த ஆப்பிள் பழத்தோல்களில் தான் வைட்டமின் சத்துக்கள் அபரிமிதமாக இருக்கின் றன!’ என்றார் கிருபளானி. - . .

மறுவிஞ்டி, நேருஜி கீழே கிடந்த ஆப்பிள் பழத்தோல், களையெல்லாம் கச்சிதம்ாகப் பொறுக்கி ஒரு தட்டில் இட்டு