பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

38

அதை கிருபளானியிடம் விஷமப் புன்னகையோடு நீட்டினர். நேருஜியின் நகைச்சுவைப் பண்பு கிருபளானியையும் தான் இரிக்க வைத்து விட்டது!

தாய் மண்

‘ஒடி விளையாடு பாப்பா!’ என்று பாட்டுப் பாடி, உங்க ளுக்கெல்லாம் உற்சாகம் ஊட்டிய கவிஞர் யார் என்பது தெரியும். ஆமாம்; பாரதியார் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்வி விடுவீர்கள்.

“மகாத்மா என்ற பட்டத்தை காந்திஜிக்குச் சூட்டிய தமிழ்க் கவி யாரென்று தெரியுமா? அந்தத் தமிழ்க் கவியும் பாரதியார் தான்! வாழ்க எம்மான்!” என்று தொடங்கும் காந்தி அஞ்சலிப் பாடலில் ‘மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்று பட்டம் சூட்டிப் பாடலை முடிக்கின்றார் அமரகவி.

பாரதியார் புதுமைக் கவி, புரட்சிக் கவிஞரும் கூட. அது மட்டுமல்ல. அவர் தேசிய மகாகவி

ஒரு சமயம்: சுப்பிரமணிய பாரதியார் வெளியூர் செல்லவேண்டி, எழும்பூர் ரயில் சந்திப்பு நிலயத்தை அடைந்தார். அவரை வழியனுப்ப வந்திருந்தார்கள் நாட்டு விடுதலையில் ஈடுபட்டி ருந்த தொண்டர்கள் பலர்.

தாய் நாட்டின் விடுதலை பற்றிப் பேச ஆரம்பித்து விட் டால், பாரதியார் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அவ்வாறு, அவர் பேசத் தொடங்கினர். வண்டி புறப்படத் தயாராக நின்றது. அதில் ஏற முயன்றார். கால் தவறித் தரையில் விழுந்து விட்டார். . உடன்ே, நண்பர்கள் பாரதியைத் தூக்க முயற்சி செய் தார்கள். • .

பாரதியார் என்ன செய்தார், தெரியுமா ? மண்ணில் புரண்டு கொண்டேயிருந்தாராம் தேசிய கவி. ‘என்னுடைய தாய் மண்ணிலே இன்னும் கொஞ்ச நேரம் புரண்டால் தான் எனக்கு அமைதி கிடைக்கும். அடுத்த ரயிலில் நான் போகிறேன்!” என்று சொல்லி, ஆசைதிர தாய் நாட்டு மண்ணிலே புரண்டாராம் அமரகவி மைசூர் நாராயண பாகவதர் யார்?

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் தமிழ் மண்ணுக்குச் சொந்தம். அவர் எழுத்துக்கள் உலகத்