பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

அவர் எழுதிய நூல் ஒன்றுக்கு ஆஸ்திரேலியப் பத்திரிகை யான சிட்னி ஹெரால்டில், விமரிசனம் எழுதியிருந்தார்கள். அதில் இவரது புகைப்படம் என்று நினைத்துக் கொண்டு, நம் பாரத ஜனதிபதியின் படத்தை தவறுதலாகப் பிரசுரித்து விட்டார்களாம்!

‘ஆஸ்திரேலியாக்காரர்களுக்கு இரண்டும் ஒன்றுதானே என்று நானும் சும்மா இருந்து விட்டேன்!” என்கிறார் நாராயணன்.

1961-ல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

1964-ல் பத்மபூஷன் நாராயணன்!”

‘நான் எழுத்தாளன் ஆக ஆகியிருக்கவில்லையென்றால், நான் மைசூர் நாராயண பாகவதர் ஆகியிருப்பேனே. என்னவோ!’ என்றார், விகடனுக்கு அளித்த பேட்டியின் போது.

ஆம்; இவர் வசிப்பது, மைசூரில்தான்!

பந்த் பல்லவி

அன்று:

ஜீப் ஒன்றில் பந்த் அவர்களும் லால்பகதூர் அவர்களும் பிரயாணம் செய்தபோது, ஜீப் விபத்துக்கு இலக்காகவே, பந்தும் சாஸ்திரியும் துக்கித் தரையில் எறியப்பட்டார்கள். பந்த் கீழே விழ, லால்பகதூர் அவர்மேல் விழுந்து விட்டார்.

பின்னர், இந் நிகழ்ச்சி நேருஜியின் காதுகளை எட்டியது.

உடனேயே நேருஜி விமர்சனம் செய்தார்.

நல்ல வேளையாகப் போப் விட்டது. நீங்கள் கீழே விழுந்து, உங்கள் மீது வல்வப பந்த் விழுந்திருக்கும் பட்சத்தில் பாவம், உங்கள் கதி என்னவாகியிருக்கும். நல்ல வேளை, தப்பித்தீர்கள்!’ என்றார் நேருஜி - லால்பகதூரைப் பார்த்து! -

பெண் திலகம்

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முதல் எதிரி யாக விளங்கியவர் அந்த அம்மையார். அவரே பின்னர், காந்தியடிகளின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவ ராகவும் ஆளுர்.

இவ்வம்மையார் பாரத நாட்டுச் செல்வியா? அல்ல, அயல் நாட்டுச் சொத்து. ஆனலும், இந்தியாவின் விடு தலைக்குப் பாடுபட்டார்! . . . . . . . . .” - -