பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

அவர்கள் உண்மையான மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்வுதான் வன் வாழ்நாளின் மகத்தான லட்சியமாகும்: என்று முடித்தார் நேருஜி.

ஆம்; மாற்றம்தானே?

பரிதிமாற் கலைஞன், பள்ளி மாணவளுகப் படித்த காலத்தில், சூரிய நாராயணன் என்னும் பெய்ரை ஆங்கில் ஆசிரியர் உச்சரிக்கக் கஷ்டப் பட்டார்.

“ஜுரி, எனக்கு உன் பெயரை உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கிறது.”

என்ன செய்தல் வேண்டும்?”

_மாற்றிக் கொள்.”

மறுநாள் ஆஜர் பட்டியலைப் படிக்க மில்லர் துரை அதிக மான கஷ்டம் அடைந்தார், சூரியநாராயண சாஸ்திரி வின் மாற்றியிருந்தார்.

  • உன் பெயரை மாற்றச் சொன்னேனே!” - .

“ஆமாம். மாற்றியிருக்கிறேன்! நீங்கள் குறுக்கச் சொல்ல வில்லையே?’ என்றாராம் மாணவன் சூரியநாராயண சாஸ் திரி.

தேன்...எண்ணிக்கை

அவிநாசியில் ஆசிரியர்கள் இலக்கிய மன்றத்துக்குரிய ஆண்டு விழாவில் முத்தமிழ்க் காவலர்”, கி ஆ. ப்ெ. விசுவ நாதன் அவர்கள் தலைமை ஏற்றார், பால்வாய்ப் பசுந் தமிழைப் பற்றிப் புகழ்ந்தார். ‘தமிழ்_மொழி தேனைப் போன்ற இனிய நற்சுவை புடையது. பேசிலுைம், கேட்டா லும் தேன் ஊறும். இப்போது பாருங்களேன்...தான் படித்தேன், நான் உட்கார்த்தேன், நான் பார்த்தேன், நான் எடுத்தேன், நான் சிந்தித்தேன்!...பாருங்கள், எத்தனை தேன், பாருங்களேன்!” என்றர். . . . --

தமிழ் ஆர்வலர்கள் திகட்டாத் தேன் மாந்திய திளைப்பில் மெய்ம் மறந்தார்கள். .

கறுப்பு ம. பொ. சி.

சிலம்புச் செல்வர் திரு. ம. பொ. சி. சென்னைப் பல்கஆக் கழகத்துக்கு செனட் மெம்பராகத் தேர்ந்தெடுக்கப்பட் டிருந்ததால், உறுப்பினர் என்ற முறையில் ஒரு பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல வேண்டியவராளுர் பட்டதாரிகள் அணியும் விசேட கறுப்பு அங்கி அணிந்து கொள்ள