பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

நன்றாயிருக்கும்!” என்றார். அன்பர், ‘தங்களுக்குப் பிரிய மானது எது என்று முன்பே கேட்டுக் கொள்ளாதது தவறு தான். ஆஞ்லும் இப்போது அந்தக் குறையைத் தெரிவித்தால் அடுத்த முறை நிறைவேற்றுவேன்!” என்றார்.

‘இவ்வளவு செய்தவர்கள், ஒரு வயிற்றையும் தயார் செப்து எனக்கு அளித்திருந்தால் எவ்வளவு திருப்தியாகச் சாப்பாடுவேன்!” என்று புலவர் சொன்னபோது, உடனிருந்த யாவரும் தடுமாற்றம் நீங்கிச் சிரித்தார்கள்.

யார் அறிஞர்?

ஒரு சமயம் எடின்பர்க் வீதி ஒன்றின் வழியாக பிளாக்கி என்ற அறிஞர் சென்று கொண்டிருந்தார். அவரது கழுத்தைச் சுற்றியிருந்த சுருள் சுருளான, பளபளக்கும் கேசத்தைக் கண்டு யாவரும் வியப்படைவதுண்டு. -

தெருவின் ஒர த் தி ல் உட்கார்ந்து கொண்டிருந்த சக்கிலியச் சிறுவன் ஒருவன் அறிஞர் முன் சென்று, ‘பூட்ஸ்-க்குப் பாலிஷ் போடட்டுமா?’ என்று கேட்டான்.

அச் சிறுவனின் அழுக்கேறிய கழுவப்படாத முகத்தைப் பார்த்த அறிஞர் அருவருப்படைந்து, ‘இந்தா, இந்த ஆறு பென்லை எடுத்துக் கொண்டு போப், முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிக் கொண்டு வா!’ என்றார்.

அச்சிறுவன் மறுகணமே அருகிருந்த குழாய்க்குச் சென்று கைகளினுல் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டுவந்து அறிஞர் முன் நின்முன். அவனது பளிச்சென்றிருந்த முகத்தைப் பார்த்து அறிஞர் திகைத்தார்.

சிறுவன் அவர் முன் வந்து, ‘ஸார், இதோ உங்கள் பணம். உங்களுடைய தலை மயிரை வெட்டிக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுங்கள்!” என் முன்.

ஜாதித் துவேஷம்

முன்பொரு தடவை தென்னட்டில் பிராமணர்-பிரா மணரல்லாதார் பிரச்னை தலைதுாக்கி இருந்த நேரத்தில், காந்திஜி மத்தியஸ்தம்ம் தேவைப்பட்டது. காந்திஜியிடம் பெரியார் ஈ. வெ. ரா. சென்று பிராமணர்களின் ஜாதிவெறி பற்றி புகார் செய்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடலில் ஒரு துணுக்கு. . . . . . . -

பெரியார்: ‘பாபுஜி, பிராமணர்களில் ஜாதி வெறியற்ற,

யோக்கியமான ஒருவரைக் கூட என்னுல் கண்டு பிடிக்க் முடியவில்லை.”

உ.-3