பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34.

காந்திஜி: “அப்படியா! நான் அதை ஏற்க மாட்டேன். இதோ, தில்கர் இருக்கிருரே! இதற்கு என்ன சொல்கிறீர்?” பெரியார்: தங்களைப் போன்ற மகாத்மாவின் கண் களுக்கே ஒருவர்தான் தென்பட்டார் என்னைப் போன்ற சாமான்யர்களுக்கு அதுகூட தெரியவில்லை போலும்!

பாத யாத்திர்ை

1985, ஏப்ரல்.

அமெரிக்க கான்ஸ்ல்-ஜெனரல் டாக்டர் பிராங்ளின் மயிலாப்பூரில் எழுந்தருளியிருந்த காஞ்சி காமகோடி பீடாதி பதிகளைத் தரிசித்து, தமது பிரியாதையைத் தெரிவித்துக் கொண்டதுடன், தமது அபிப்பிராயத்தையும் தெரியப் படுத்திக் கொண்டார். நீங்கள் பாத யாத்திரை செய்யும் போது, தங்கள் பின்னல் நானும் தொடர்ந்து நடந்து வர விரும்புகிறேன்!” என்பதே அவர் விருப்பம்!

பேசும் தெய்வம் இணங்கி முறுவல் பூத்தது!

“வந்தே மாதரம்”

1942-ல் சிறையில் மகாத்மாஜி உடல் நலமிழந்து இருந்: தாா.

அவரது உடல்நலம் சீர்பெற இந்தியா பூராவிலுமே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. -

சென்னையில் அம்மு சுவாமிநாதனும் மஞ்சு பாஷிணி முதலாளுேர் மட்டுமே எஞ்சி நின்றனர். அவர்கள் பிரார்த் தனக் கூட்டத்தை நடத்த முன்வந்தனர். அவர்களையும் கடைசி நேரத்தில் வெள்ளையாட்சி கைது செய்தது.

அப்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இருதய நோயால் அவதிப்பட்டார். விவரம் அறிந்து ஓடிவந்து, கூட்டத்தை நடத்தினர். கூட்டம் நடத்தினல் கைது. செய்வோம்! என்று பயமுறுத்திய அதிகாரியை எள்ளி நகை யாடினர். ‘காந்திஜியின் உயிரைக் காப்பதற்காக இங்கே தடைமீற வந்திருக்கும் நாங்கள் கைதாவதற்கு மட்டுமல்ல; தூக்கு மேடை ஏறவும் தயார் ஒன்று வீறுகொண்டு பேசினர். போலீசும் சேர்ந்து வேடிக்கை பார்க்கும் நிலை வந்தது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஜனக்கூட்டம் கூடியது.

‘வந்தே மாதரம்!...மகாத்மா காந்திக்கு ஜே!’ என்ற கோலுங்களுடன் கூட்டம் ஜாம் ஜாம் என்று நடந்து

மறுநாள், காந்திஜி விடுதலை செய்யப்பட்டார்!