பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

தாய்நாட்டின் சொத்து

வ. வே. சு. ஐயரால் சேரமா தேவியில் நடத்தப் பட்டு வந்த ப ர த் வா ஜ் ஆஸ்ரமத்திற்குப் போட்டியாக, கம்யூனிஸ்டுத் தலைவர் திரு ப. ஜீவானந்தம் காரைக்குடிஇராவயலில் காந்தி ஆஸ்ரமம் நடத்தி வந்தார். -

அந்த ஆசிரமத்துக்கு வ. உ. சி., வ. ரா. போன்றாேர் சென்றார்கள். -

அந்நேரத்தில், இலங்கைக்குப்போகும் வழியில் மகாத்மா காந்தி காரைக்குடிக்கு விஜயம் செய்தார். அவரை ஜீவாவும் ஏனைய நண்பர்களும் ஆசிரமத்துக்கு அழைத்தனர்.

“உங்களுக்குச் சொத்து ஏதாவது இருக்கிறதா?’ என்று ஜீவாவிடம் காந்திஜி கேட்டார்.

‘என் தாய்நாடுதான் என் சொத்து, பாபுஜி!” என்றார் 56,or. ஜி ‘இல்லை. நீங்கள்தான் நம் தாய்நாட்டின் சொத்து!” என்றார் காந்திஜி. ஷேக்ஸ்பியர் சொத்து

ஆங்கில இலக்கியத்தின் மங்காத துருவ நட்சத்திரமாக விளங்குபவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் திருமணம் புரிந்து கொண்ட ஆனே ஹதாவே அவரைவிட எட்டு வருஷம் மூப்பு. இருவருக்கும் அடிக்கடி சண்டை, சச்சரவு தான்; ஆகவே அவர் அவளே விட்டு வெகுதுரம் விலகியே வாழ்ந்தார்.

பதின்மூன்று வயசில் பள்ளிக்கூடத்தை விட்டு வேலைக்குப் போர்ை ஷேக்ஸ்பியர். பால் கறத்தார்; ஆடு மே ப்த்தார்; தோல் பதனிட்டார். - ... “ -

லண்டன் வந்து பல வருஷங்கள் கழித்ததும், அவர் ஒரு நடிகராஞர். நல்ல பணம் சம்பாதித்தார். கூடுதல் வட்டிக்கு கடன் கொடுத்தார். அவருக்கு வயது நாற்பதானபோது அவ ரிடம் ஏராளமாகச் சொத்து இருந்தது. இத்தனை சொத்தில் அவர் தம் மனைவிக்கு ஒரு செண்ட் கூட விட்டு விைக்க cళుశిఖ! . . . ... ‘ - ..? “ அவரது நாடகங்கள் எல்லாம் அவர் இறந்து ஏழு வருஷ்ங்கள் கழித்துத்தான் வெளிவந்தன! . . .

ஷேக்ஸ்பியரின் பெயரில் வந்த நாடகங்கள் எல்லாம் ஸர் பிரான்ஸிஸ் பேகன், ஆக்ஸ்போர்ட் ஏர்ல் போன்றாேரால் எழுதப்பட்டவையே எ ன் ப ைத நிரூபிப்பதற்கென்றே.