பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

நிறையப் புத்தகங்கள் வெளிவந்தன வென்று டாக்டர் எஸ். ஏ. டானென்பாம் எழுதுகிரு.ர். இவரும் ஷேக்ஸ் பியரின் விமரிசர்களிலே ஒருவர்; குறிப்பிடத் தகுந்தவர்!

சிறுமியே குரு

உலகப் பேரறிஞர் ஈன்ஸ்டீனத் தேடிக் கொண்டு பள்ளிச் சிறுமி ஒருத்தி அவரது 112-ம் எண் இல்லத்துக்கு ஒடி வந்தாள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் போட்ட வீட்டுக் கணக்கைச் செய்து தரச் சொன்னுள்; அவ்வாறே கணக்குக்கு விடை கண்டு சொல்லிக் கொடுத்தார். இந்நிகழ்ச்சியைத் தன் தாயிடம் போய்ச் சொன்னுள் இமி.

சிறுமியின் அன்னை விவரம் அறிந்து துடித்தாள்.

விஞ்ஞான மேதையின் பொன்னை பொழுதை வீணடித்து விட்டிருக்கிருளே தன் மகள் என்று வருந்தி அப்பெரியாரிடம் மன்னிப்பு வேண்டினுள். -

‘ க்கள் மகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டதைப் பார்க்கிலும், நான் அவளிடமிருந்து கற்றுக் கொண்டதே அதிகம்!” என்றார் அப்பெரியார்!

காஷ்மீர் நிலை

மறக்க முடியாததொரு சம்பவம்:

இந்தியப் பிரதமர் நேருஜியும் பாகிஸ்தான் பிரதமரான அயுப்கானும் புதுடில்லியில் விமான நிலையத்திலேயே ஒர் அறையில் உரையாடினர். - -

நேருஜி ஒர் ஆப்பிளை எடுத்து அயூப்கானிடம் கொடுத் தார். - - - - - -

அயூப் உடனே ஒரு கத்தியை எடுத்து ஆப்பிளேச் சுட்டிக் காட்டி, ‘இது காஷ்மீர்!’ என்று கூறி, அதை வெட்டி ஒரு துண்டத்தை நேருஜியிடம் நீட்டினர். . -

காஷ்மீரைப் பிளவுபடுத்த வேண்டுமென்ற வெறிக்கு, சூசகமா அச்சம்பவம்? . . . .

ஆப்பிள் சரிவர வெட்டப்படாததால், நேருவிடம் இருந்த ஆப்பிள் கொஞ்சம் பெரிதாக இருந்தது. அயூப்கா னிடம் இருந்தது சிறிதாகக் காணப்பட்டது. ‘இன்றைய நிலையைச் சொல்கிறீர்களா?” என்று வினவினர் நேருஜி. . . . . . . . .

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் பிடித்துவைத்

திருந்த பழைய நிகழ்ச்சியைத்தான் அன்று நேருஜி அப்படிக் குறித்தார்!