பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

அவரது நண்பர் ஜான் மாத்யூ என்பார் அப்போது இறந்து போயிருந்த சமயம்.

‘உங்கள் நண்பர் ஜான் மாத்யூவின் ஆவி உங்களுடன் பேசியிருக்குமே, என்ன சொன்னது?’ என்று அவரிடம் வேறொரு நண்பர் கேட்டார்.

‘இல்லை’ என்று விடையளித்தார் துப்பறியும் கதாசிரியர்.

பார்த்தீர்களா? இறந்தவர்கள் பேசுவார்கள் என்பது வெறும் ஹம்பக் என்று இனிமேலாவது ஒப்புக் கொள்ளுவீர் களா?” என்று ஒர் அழுத்தம் கொடுத்து வெகு அமர்த்தலாகக் கேட்டார் நண்பர்.

கானன்டாயல் கட கடவென்று மறுகணம் சிரிப்பைக் கக்கினர். அதெப்படி மிஸ்டர் புல்!...அவர் இறந்த சமயத்தில் எனக்கும் அவருக்கும் பலத்த மனஸ்தாபம், பேச்சு வார்த்தை கிடையாதே! பின் எப்படி, அவர் ஆவி வந்து என் னிடம் பேசும்? கொஞ்சமாவது விவேகமாக ங்கள் கேள்வி களை அணுகக் கூடாதா?’ என்று மடக்கப் பார்த்த நபரையே மடக்கி விட்டார் ஆசிரியர்.

பெரியவர்கள்

அப்பொழுது இயங்கிய அரசியல் உலகிலே திரு ஈ. வே. ரா., ராஜாஜியின் வலது கையாக விளங்கி வந்தார். காங்கிரஸ் வேலைகளிலே அதிக உற்சாகம் காட்டி உழைத் தார்.

மாநாடு ஒன்றிலே குறிப்பிட்ட சிலரால் கொண்டு வரப் பட்ட ஒரு தீர்மானத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த ராஜாஜி எண்ணினர். பக்கத்தில் அமர்ந்திருந்த ஈ. வே. ரா-விடம் அத்தீர்மா னத்தை எதிர்த்துப் பேசச் சொன்னர், வேறு கவனத்தி லிருந்த ஈ. வே. ரா. அவர்கள் என்ன, ஏது என்று கூட வினவாமல், அத்தீர்மானத்தை எதிர்த்து சரமாரியாகப் பேச ஆரம்பித்தார். அவர் பேச்சை முடித்த பிறகு தன் ஆசனத் தில் அமர்ந்தவுடன், ‘ஏன் அந்தத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னீர்கள்?’ என ராஜாஜியைச் கேட்டார். - : “ , -

- ராஜாஜி சிரித்துக் கொண்டே, அதைத்தானே இவ்வளவு நாழி நீங்கள் விளக்கிக் கொண்டிருந்தீர்கள்

என்றார்,