பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

நரகத்துக்கு!

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காங்கிரசுக்குத் தேர்தல் அண்டிக் கொண்டிருந்தது, 1847-ஆம் ஆண்டு. -

‘விக் கட்சியின் சார்பிட்டு ஆபிரஹாம்லிங்கன் நின் ருர். அவருக்கு எதிராக டெமொக்ராடிக் கட்சியின் சார்பில் பீட்டர் கார்ட்ரைட் எனும் மதபோதகர் நின்றார்,

அவர் ஒரு கூட்டத்தில் மதச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். லிங்கனும் அக் கூட்டத்துக்கு வந்து இருந்தார். லிங்கனுக்குக் கடவுள் நம்பிக்கையும் மதப்பற்று தலும் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமென்று விரும்பினர் போதகர். உங்களிலே சுவர்க்கத்தை அடைய விரும்புவோர் எழுந்திருங்கள்,’ என்றார், -

சிலர் எழுந்து நின்றார்கள். பிறகு! ‘'நரகத்துக்குச் செல்ல விரும்பாதவர்கள் எழுந்து நிற்கலாம்!” என்றார்,

ஆபிரஹாம்லிங்கனத் தவிர, அனைவரும் எழுந்து. நின்றனர். -

மதபோதகர் விசையுடன் லிங்கன நோக்கி, லிங்கன் அவர்களே! தாங்கள் எங்கே செல்ல ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அமைதியான நிதானத்துடன், ‘காங்கிரசுக்குச் செல்ல ஆசைப்படுகிறேன்!” எ ன் று பதிலிறுத்தார். ஆபிரஹாம்லிங்கன்!

ஹிட்லருக்குக் கடிதம்

உலக மகாயுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில்ே தீரர் ஹிட்லர் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த, வேளை அது. அப்போது அண்ணல் காந்தி அடிகள் அன்ன. ருக்குக் கடிதமொன்று எழுதி அனுப்பினர். -

“ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட நீங்கள் பலாத்காரமான வழிகளைக் கடைப் பிடித்து வருகிறீர்கள். ஆனல், நானே, அறவழி முறையில் நம்பிக்கை வைத்துச் செய்ற்பட்டு வருகிறேன். அவ்விரு வழிகளிலே எதற்கு வல்லமை உண்டு என்பதைக் காலமல்லவா உலகத், துக்கு எடுத்துரைக்க வேண்டும்!” என்று காந்திஜி எழுதினர்.

ஆம்; காலம் எடுத்துக் காட்டி விட்டதே-அறம் வெல்லும் என்பதை!