பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

சிரிக்கும் மனிதர்!

உலகத்தையே ஆட்டிப் படைத்த அடால்ப்ஃ ஹிட்லர்அந்த நாஜிஸ்ப் பயங்கர வாதியையும் ஓர் அதிசய மனிதர் திகைக்க வைத்தார் என்றால், அதிசயம்ாகத் தோன்றுகிற தல்லவா? -

அம் மனிதர் அந்த ஹிட்லரைக் கூட பயமுறுத்திய அளவுக்கு அவர் கைவசம் வைத்திருந்த ஆயுதம் சிரிப்புஅவர் தயாரித்த சர்வாதிகாரி என்னும் படம்!

அந்தச் சிரிப்பின் மனிதர்தான்; சார்லிசாப்ளின்!

சைமன்ஸ் பரதன்

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கத் தூதராக தமிழ கத்தில் இருந்தார் டாக்டர் சைமன்ஸ். -

அவர் இங்கிருந்த வரையில் ஒரு தமிழராக-ஒர் இந்திய ராகவே பழகினர். அப்படியென் ருல் அவரது நல்ல மனத்தை யாவரும் புரிந்து கொள்ளக் கூடும்.

ஒரு சமயம், அவர் கம்பராமாயணத்தைப் பற்றி ஒரு விருந்தில் ஒர் உரை நிகழ்த்தினர். பரதனின் உயர்வு பற்றி அவர் கிட்டத்தட்ட நூறு நிமிஷங்கள் வரை அழகாகப் பேசினர் என்றால், ராமாயணத்தில் அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும், புலமையும் புலனுகிறதல்லவா? அவரது உணர்ச்சிச் செறிவு மிகுந்த சொற்பொழிவைக் கேட்டு தமிழ்ச் சான்றாேர் பலர் அப்படி மெய்ம் மறந்து போயின

ராம்!

இரட்டைப் பலம்

பிரசித்தி பெற்ற தளபதி மாண்ட் கோமரிக்கும் சர்ச்சி லுக்கும் இடையில் ஒரு பேச்சு நடந்து கொண்டிருந்தது.

ஒருவகைப்பட்ட தனித்த கர்வப் பிடிப்புடன் பெருமை யாகத் தலையை நிமிர்த்திய தளபதி மாண்ட் கோமரி, ஸ்ர் வின்ஸ்டன் சர்ச்சிலை நோக்கி, நான் குடிப்பதில்லை; புகை பிடிப்பதில்லை; அதனுல்தான் உடல் வலிமையுடன் காணப் :படுகிறேன்!” என்று சொன்னர். -

- சர்ச்சில், “நான் குடிக்கிறேன்; புகை பிடிக் கிற்ேன்: அதனுல்தான் உங்கள்ைப் போல இரண்டு மடங்கு வலிமையுடன் காணப்படுகிறேன்!” என்றார்ே, பார்க்கலாம்!