பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

எழுத்துக்களை அவர் படித்திருக்கிரு.ர். அவற்றைப் புகழ்ந்து பாராட்டிஞர் ஐயர்.

பின்பு, தம்து வாழ்நாளில் நடந்த சில நிகழ்வுகளைச் சொன்னுர்:

ஒரு சமயம், ஒரு ஜமீந்தார் முன்பு, ஐயரும் தமிழ்ப் பண்டிதர் ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். அப்போது, அந்தப் பண்டிதரைப் பார்த்து, சாமிநாதய்யருக்கு உம்மைப் போல நிமிடத்துக்கு ஒரு பாட்டு இயற்ற மு டியுமா, என்ன? அவருக்கு என்ன தெரியும்?” என்று வஞ்சிப் புகழ்ச்சி செய்தார்.

இதை அறியாத பண்டிதர், அந்த ஜமீந்தாரின் கூற்று: உண்மையென்றே எண்ணி மகிழ்ந்தாராம்.

இதைக் கேட்ட கல்கி அவர்கள், கொஞ்ச நாழிகை முன்பாக என்னை உற்சாகப்படுத்துவதற்காகத் தாங்கள் பாராட்டியதை, நான் உண்மையென்றே எடுத்துக் கொண்டு நம்பி மகிழலாமல்லவா?’ என்றார், புன்னகைக் கோலத் துடன். - -

தமிழ்த் தாத்தா குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “உம் எழுத்து அசல் தங்கமய்யா!...தமிழ் கூறும் நல்லுலகமே ஒப்புக் கொண்டு விட்ட உண்மை ஆயிற்றே அது!’ என்று பாராட்டினுர் மீண்டும்! -

மொழியில் பாகுபாடா!

காந்திஜியின் ஹரிஜன நிதிக்கு ஐந்து ரூபாய் கொடுத் தால்தான் ஆட்டோகிராப்ஃ’ல் அவரது கையெழுத்தைப் பெற முடியும்.

அந்த ஐ. வி. எஸ். பிரமுகர், ஐந்து ரூபாயை நீட் டிர்ை. தம் வழக்கப்படி ஹிந்தியில் கையெழுத்துச் செய்து கொடுத் தார் காந்திஜி.

ஆணுல் அந்த ஐ. ஸி. எஸ். காரரோ தமிழில்தான் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டுமென்றர்.

‘அதற்கு ரூபாய் நூறு வேண்டும்’ என்றார் காந்திஜி. ‘தமிழுக்கும் இந்திக்கும் ஏன் இந்த வேறுபாடு?’ என்று. கேட்டார் பிரமுகர். - . . . - . . . . தலைவரோ திகைத்தார். பிறகு ஐந்து ரூபாய்க்கே தமிழிலும் ஒரு கையெழுத்துப் போட்டு நீட்டிர்ை.

பிரமுகர் விடாக்கண்ட்ர். மீண்டும் ஓர் ஐந்து ரூபாயைக் -- ஆங்கிலத்திலும் கையெழுத்துப் போடும்படி