பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

காந்திஜிக்குக் கோபம் வந்தது. ‘ஓர் இந்தியனுக்கு ஆங்கிலத்தில் கண்டிப்பாகக் கையெழுத்துப் போட்டுத் தர முடியாது!’ என்று மறுத்தார்.

ஐ. ஸி. எஸ். புள்ளி, தாங்கள் மொழி, இனம் இவற்றில் வேற்றுமை காட்டுபவரல்லர் என்பதை நிரூபிக்கவே ஆங்கிலத் திலும் போட்டுத் தரும்படி கேட்டேன். அவ்வளவுதான்!” என்று மடக்கினர்.

வேறு வழியின்றி, தலைவர் புன்முறுவலுடன் ஆங்கிலத்தி லும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

அந்த ஐ. வி. எஸ். ஏ. எஸ். பி. ஐயர் -

நான்களுக் கையெழுத்து

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒருசமயம் பெரியார் ஈ.வே. ரா-வும் குன்றக்குடி அடிகளும் நாகரசம் பட்டியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, அடிகளார். கன வேகமாக நோட்டுக்களிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஐயா கேட்டார், அடிகளிடம். ‘ஒரு கையெழுத்துக்குப் பணம் எவ்வளவு?’ என்று.

தாம் சம்மா..இனமாகத்தான் போடுவதாகச் சொன்னர் குன்றக்கு டியார்.

‘பொது வாழ்வுக்கு வந்து விட்ட உங்களுக்கு இம்மாதிரி விஷயங்கள் ஒரளவுக்காவது உதவும். தயங்கக் கூடாது!” என்று இதோபதேசம் செய்தார் சமுதாயச் சீர்திருத்தத் தந்தை, * -

அவவளவு தான். - அடிகளார் போட்ட அடுத்த கையெழுத்து நாலணு விலைக்குப் போய்விட்டது.

தட்சினையும் கடனும்

வங்கப் பிரமுகர் ஆசுதோஷ் முகர்ஜி ஒருநாள் விடி காலையில் கங்கையில் கு சித்துத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வயதான ஒர் அம்மாள் அவரைத் தடுத்து, “மகனே, ஒன் கோலப் புனிதத்தை நோக்கும்போது, நீ ஒரு பிராமணன் என்று தெரிகிறது. நான் என் விரதத்தை முடிக்க வேண்டி விருப்பதால், என் வீடு வந்து பூஜையை நடத்தித் தர முடியுமா? அதற்குரிய தட்சணையைக் கொடுத்து விடுகிறேன்: என்றாள். - -