பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

அவர் சம்மதித்து அந்த அம்மணியின் பூஜையை முடித்துக் கொடுத்தார்.

முறைப்படி கொடுக்க வேண்டிய 151ST அரிசியையும் ஐந்தணு பணத்தையும் அம்மணி அவரிடம் நீட்டினுள்.

ஆசுதோஷ் அவற்றை வாங்கிப் பத்திரமாக முடிந்து கொண்டார். ஆசுதோஷை அறிந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். -

ஐயோ! இவர் யார் தெரியுமா, அம்மனி? இவர்தான் ஜட்ஜ் ஆசு தோஷ் முகர்ஜி என்ர்கள்.

“நான் ஹைகோர்ட் ஜட்ஜானுல் என்ன? நானும் பிராம்மணன் தானே? ஆகவே, தட்சினை யைப் பெற்றுக் கொள்வது என் கடமையல்லவா?’ என்றார்.

பொல்லாத பேர்வழி

திலகரின் நடவடிக்கைகளை ளவு அறிவதற்காக பிரிட்டிஷ் சர்க்கார் ரகசியப் போலீஸ்காரன் ஒருவன திலகரின் சமையல்காரகை அமர்ந்து கவனித்து வரும்படி அனுப்பினர்கள். அவனும் அப்படியே திலகரின் சமையல் காரணுக அமர்ந்தான்.

ஆறு மாதம் சென்றது. அந்தச் சமையல்காரன் திலக ரிடம், ‘எஜமான், சம்பளம் போத வில்லை; கொஞ்சம் உயர்த்த வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்.

திலகர் சிரித்துக் கொண்டே, ‘ஏனப்பா இது! நான் மாதம் ஆறு ரூபாய் கொடுக்கிறேன். சர்க்கார் இருபத்து நான்கு ரூபாய் கொடுக்கி ஒர்கள். இன்னும் திருப்தி இல்லையா உனக்கு’ என்று கேட்டார்.

அவ்வளவுதான்! ஆசாமியின் தலை தொங்கி விட்டது. அப்புறம் அவனைக் காணவேயில்லையாம்!

போதுமானது

காலஞ்சென்ற மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் சிலேடையாகப் பேசுவதில் வல்ல. வர்கள். அவர்கள் பேசிக் சொண்டு வரும்போதே, இரண்டு பொருள் தொனிக்கும்படி தொடர்கள் சில இருக்கும்.

ஒருநாள், ராமநாதபுரம் ராஜாவுடன் அவர்கள் இலக்கிய சம்பந்தமாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். நேரம் யோனதே தெரியவில்லை. பேச்சு ஒரு கட்டத்தை அடைந்த போது, ராஜா கடிகாரத்தைப் பார்த்தார். அதிக நாழிகை. ஆனது தெரிந்து, ‘நெடுநேரம் ஆகிவிட்டது” என்றார்,