பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

மதுரைக் கோயில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகத் துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதும், திரு பி. டி. ராஜன், சுவாமிகளைக் கண்டு, கும்பாபிஷேகத்துக்கு வந்து ஆசிபுரியு மாறு வேண்டிக் கொண்டார். தேதியையும் குறித்தார். அவ்வளவு தூரம் ராமேசுவரத்திலிருந்து கால்நடையாக வரக் கூடாதென்றும் மேனுவில் வருவது சுவாமிகளுக்கு நல்லது என்றும் சொன்னர்.

‘மீனட்சி எனக்கு நடக்கச் சக்தி அளித்திருக்கும்போது, நீ ஏன் கவலைப்படுகிறாய்?’ என்றார்கள் சுவாமிகள்.

‘மீனுட்சியம்மையும் தங்களோடு சேர்ந்து விட்டாற் போலிருக்கிறதே!’ என்றார் ராஜன்.

‘ஏன், அதனுல் .னக்கு வகுத்தம் உண்டோ?” என்றார்கள் சுவாமிகள், வேடிக்கையாக.

தள்ளாத காலத்தில் கால் நடையாக வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுமே என்றே வருத்தப்பட்டார் ராஜன்.

ஆணுல், சுவாமிகள் தம் கருத்துப்படி, ராமேசுவரத்தி லிருந்து நான்மாடக்கூடலுக்குக் கால்நடையாகவே எழுந் தருளி, கும்பாபிஷேகத்துக்குச் சரித்திரச் சிறப்புக் கொடுத் தார்கள்! -

பழஞ்சுவை

மேதை பெர்னட்ஷாவின் அறிவுத் திறனைப் பாராட்டி, அவரைக் காதலிப்ப்தாக் நடிகை ஒருத்தி கடிதம் அனுப்பி, யிருந்தாள். ‘என்னைத் தாங்கள் மணம் செய்து கொள்ளும் பட்சத்திவே, என்னைப் போன்ற அழகும் உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்குமல்லவா?’ என்று மேற் படி கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தாள் நடிகை. அதற்குப் பெர்னட்ஷா அளித்த பதில் இதுதான்: ‘உங்கள் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. ஆனல் ஒரு சிறு சந்தேகம். இதற்கு மட்டும் விடை தாருங்கள். நாம் இருவரும் கல்யாணம் புரிந்து கொண்டால், என்னைப் போன்ற அழகும் உங்களைப் போன்ற அறிவும் இணைந்த குழந்தைகள் பிறந்து விட்டால், என்ன ஆவதாம்?’.

அப்புறம் ஷாவின் பக்கம் ஏன் திரும்பப் போகிருள் அந் நடிகை! . . . . . . . . . . . . . . . . . . . , கஸ்துரித் திலகம்

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கென மகாத்மா காந்தி அடிகள் புனித வேள்வியை ஆரம்பித் திருந்தார்.