பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56

‘வாருங்கள்,” என்றார் காந்திஜி. இருவருமாகக் கிணற்றடிக்குப் போனர்கள். காந்திஜி தமது வேலைகளை வெகு அமைதியுடன் செய்து கொண்டிருந்தார்.

வந்த பணக்காரருக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘என்ன ஐயா, நான் மகாத்மாஜியைப் பார்க்க வந்திருக் கிறேன். வா என்று சொல்லி, என்னை இங்கே அழைத்து வந்து விட்டு, நீர்பாட்டுக்கு உமது வேயிேல் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீரே!...முக்கியமான காரியமாக நான் காந்திஜியைப் பார்க்க வேண்டும், ஐயா! அவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்!” என்று கோபமும் பதட்டமும் தொனிக்கப் பேசினர் வந்தவர். -

காந்திஜி நிதானமாகச் சிரித்தார். பிறகு, ‘நான்தான் காந்தி, உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

வந்த செல்வந்தர் வாயடைத்துப் போனர். உலகப் புகழ்பெற்ற மகாத்மா இவ்வளவு எளிமையான வாழ்வு வாழ் கிருரே! எளிய உடை உடுத்துகிருரே!...வேலைகளையெல்லாம் தாமே செய்கின்றாரே!” என்று வியந்தார். காந்திஜியைக் கண்முன் கண்ட களிப்பிலேயே மெய்ம் மறந்த அவர், என்ன பேசுவதென்று புரியாமல் அப்படியே சிலையாக நின் ருர்! அவர் கைகள் மகாத்மாவை நோக்கிக் குவிந்த வண்ணம் இருந்தன.

மகாத்மா பதில் வணக்கம் செய்தபடி வெகு அமைதியாக வும் மிக நிதானமாகவும் புன்னகை செய்தார்; அவரது கைகள் அந்தப் பணக்காரரை வணங்கிக் கொண்டிருந்தன!

விவாகம்.சத்து

கேண்டர்பரி ஆர்ச் பிஷப் அமெரிக்காவுக்குச் சென்றார், அவர் ஓர் அமெரிக்கப் பிஷப்பிடம், “இங்கே விவாக ரத்து விகிதம் அதிவேகமாய்ப் பெருகிக் கொண்டு போகிறது. இது எதைக் காட்டுகிறது, தெரியுமா?...அமெரிக்கா சுதந்திர புருஷர்களின் நாடாகி வருகிறது என்பதைத் தானே?” என்று வினவினர். - -

உடன்ே அமெரிக்க பிஷப் கூறலாஞர். ‘உண்மையே, இருந்தர்லும், இங்கே விவாகங்களின் விகிதமும் பெருகிக் ஆெண்டே வருகிறது. இது எதைக் காட்டுகிறது, தெரியுமா? bரிக் லும் வீர புருஷர்களின் நாடாகவே இருந்து

தைத்தான்! இல்லையா?..."