பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

பிறகு, அவரை விடுதலை செய்தார்கள்.” விடுதலையானபின், போஸ் தமது வீட்டில் ஒர் அறையைச் சுற்றி கறுப்புத் திரை கட்டி, அதனுள்ளேயே இருந்தார்.

ஆட்சியாளரின் காவல்படை வெளியே காவல் இருந்தது. வைத்தியர் என்ற முறையில் ஒரு முஸ்லீம் மட்டும் அவரை தினமும் பார்த்து வர முடிந்தது.

‘நாட்ட்ை விட்டு வெளிய்ேறி, ஆங்கிலேயர்களின் எதிரி களுடன் தொடர்பு கொண்டு, ஆயுத உதவி பெற்று, வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரட்டி, இராணுவம் அமைத்து, அப்பால் இந்த வெள்ளையர்கள் மீது ஆயுதப் போர் தொடுக்க வேண்டும்’ என்று எண்ணமிடலானர்.

உடனே, தாமே அந்த முக்மதிய வைத்தியர் மாதிரி உடுத்துக் கொண்டு அங்கிருந்து போய் வெளியேறினர்.

வெள்ளையர்கள் விழித்தனர். ஹிட்லரைச் சந்தித்தார் போஸ். தற்காலிக இந்திய அரசாங்கத்தின் தலைநகராக சிங்கப் பூர் ஆனது. தம் திட்டத்தை வானெலி மூலம் மகாத்மாவுக் கும் தாய்நாட்டு மக்களுக்கும் அறிவித்தார். போஸ் தலைவு ரானுர். இந்திய விடுதல் அரசாங்கத்தைப் பிரகடனப்படுத்தி ஞர். விடுதலை முழக்கம் ஒலித்தது. நேதாஜி” என்று மக்கள் அவரை அழைத்தனர். இராட்டை பொறித்த மூவர்ணக் கொடி அவர்களது அரசாங்கத்தின் தேசியக் கொடி ஆனது. பெண்கள் படைக்கு ஜான்ஸி ராணியின் பெயர் சூட்டப் பட்டது. தலைவி: லக்ஷ்மி -

இந்தியாவின் சுதந்தர அரசாங்கத்தை ஒன்பது நாடுகள் அங்கீகாரம் செய்தன. -

ஜப்பான் தன் வசப்படுத்தியிருந்த அந்தமான், நிக்கோபார் தீவுகளை நேதாஜியிடம் ஒப்புவித்தது. -

ஆனால், இருமுனைத் தாக்குதலால் ஜப்பான் அடைந்த சரணுகதியின் விளைவாக நேதாஜி, செய்கோன் போய்ச் சேர்ந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு ஏறிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. . . . . . . . . நேதாஜி இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், நிம்மிடைய்ே. -

வீரம் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஜெய்ஹிந்த்! : ‘ ‘ - “ - ஞானப்படகில்

சீன ஞானி ஹியூன் ஸாங் இந்திய நாட்டில் நாளாந் தாவில் பணி முடித்துத் தம் தாய்நாடு திரும்பிய தருணத்தில்,