பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

81

“தெருவில் சென்று கொண்டிருக்கையில் பேராசிரியர் :பாலபனேவ் ஒரு தொப்பியைக் கண்டெடுத்தார். அதை எங்கள் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்!”

இவ்விளம்பரத்திற்குப் பணம் - கட்டணப் ப ண ம் கொடுத்து விட்டு, பேராசிரியர் தொப்பியையும் அங்கே விட்டு விட்டுப் போய்விட்டார்.

சில நாள் சென்றபின் அப்பேராசிரியர், விளம்பரம் வந்த செய்தித் தாளுடன் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து தமது தொப்பியைத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொண்டாராம்.

எப்படி இந்தப் பேராசிரியரின் ஞாபக சக்தி!

“சுந்தரர் பெர்த்’

பத்மபூஷன் அரியக்குடி ராமாநுஜ அய்யங்காரின் புகழ் பெரிது. அவரது அடக்கம் ஆச்சரியப்படத் தக்கது. சரள் மான சுபாவமும் இனிய முகமும் யாவரையும் வசீகரம் செய்யும். சாதுர்யமாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வெகு வல்லவர் அவர், சபாரஞ்சகமாகப் பாடுவது மாதிரியே சமயோசிதமாகப் பேசுவதிலும் சமர்த்தர் அரியக்குடி, சிறந்த அறிவாளர். - - -

ஒரு முறை:

வெளியூர்க் கச்சேரிக்குப் பயணப்பட எண்ணி, ஸ்டேஷ னுக்குச் சில விவரங்களை அறிந்து வரும்படி தம் சிஷ்யர் ஒருவரை அனுப்பி வைத்தார் -

‘அப்பர் பெர்த்தான் இருக்கிறதாம்’ என்றார் சீடர்.

‘ஏன், சுந்தரர் பெர்த் இல்லையா?” என்று கேட்டார், அரியக்குடி.

சீடருக்குச் சிலேடையின் நயம் புரிய சில காலப்

பிரமாண நேரம் ஆனது!

ஷேக்ஸ்பியர் பையன்

மகாகவி ஷேக்ஸ்பியர் ஏதோ தண்டனைக்கஞ்சி லண்ட னுக்குத் தப்பி ஓடினர். - - - -

சிறு வயசுப் பையன். எலிஸபெத் ஆண்ட காலம் அது. - நாடக அரங்குக்கு ஆடம்பரமான பிரபுக்கள் குதிரைகள் மீதேறி வருவார்கள். அவர்கள் விட்டுச் சென்ற குதிரைகனைப் பார்த்துக் கொள்ளும் வேலை கிடைத்தது ஷேக்ஸ்பியருக்கு.