பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63

ஞல் அவள் அனுப்பிய ரகசியச் செய்தி மூலம், காவோ

பெங் தெரிவித்த பெட்ரோல் எண்ணெய்க் கப்பல் நங்கூரம் இட்டிருந்த செய்தி ஒரு தோழருக்குத் தெரிந்தது,

உடனே அபாய அறிவிப்பு மூலம் அத்தோழர் அகப் பட்டார். சுடப்பட்டார். தோழரிடம் இரு வெடிகுண்டு. களும் சில ரகசியத் தபால்களும் கிடைத்தன. அமெரிக்க ரகசியப் போலீஸ் இலாகா சுறுசுறுப்படைந்தது.

மணமக்களாக வந்த நான்கு சீனச் சுந்தரிகளின் போட்டோக்களும் கிடைத்தன. எல்லாம் அவர்களின் உளவு வேலை என்பதும் புரிந்தது. -

மறுவாரம், சீன வியாபாரி கா வோ பைங்கின் மாளிகையைப் போலீஸார் சூழ்ந்தனர். ஸ்ைலி வந்து கதவைத் திறந்தாள். வெளியில் சென்ற காவோ பைங் திரும்பினும் - - - -

ஸ்ைலி, ரிவால்வரால் போலீஸ் அதிகாரியைச் சுட முயன்றாள். ஆனல் அதற்குள் அவளே சுடப்பட்டாள். -

தம் ஆசை நாயகி ஒரு பயங்கரச் சீன வேவுகாரி என்பது கிழவருக்குப் புரிந்தது!

சம உயரம்

பாரதத்தின் பிரதம மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் கடமை புரிந்த வேளை அது.

அப்போது புது டில்லி ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் விழாவுக்குத் தலைமை தாங்கும்படி வேண்டப்பட்டது. சென்றார், தலைமை ஏற்றார்,

ஆயிரக் கணக்கான சிறுவர்-சிறுமியர் உலகம் குழுமி யிருந்தது. * ov- . . .

சாஸ்திரிஜி மைக்"கின் முன் எழுந்து நின்று பேசத். தொடங்கினர். இவ்வாண்டு வைபவத்துக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்ததானது, நானும் உங்கள் உயரத்தில் இருப்பதை உத்தேசித்துத்தான் என்று நம்புகிறேன்’ என்று: *தமாஷ் பண்ணி விட்டு, பேச்சின் மையத்துக்கு நாடினர்.

§ {}s - - -

புது டில்லியில் பார்லிமெண்ட் வீதியில், தவிக்குயில் சரோஜினி தேவியின் நினைவுத் தபால்தலை வெளியீட்டு விழா நடந்தது. - - ....-منذ ع .

ஏ. கே. சென், டி. டி. சே., லால்பகதூர் முதலானேர் மேடையில் இருந்தனர். - -