பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

“ஒடக் குழல்’ என்ற மலையாளக் கவிதைத் தொகுதி நூலுக்கு காசியிலுள்ள ‘பாரதீய ஞான பீடம் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கியிருக்கிறது. ஒரு கவிதை நூல் இத்தகைய மகத்தான கவுரவத்தைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதன் ஆசிரியர் ஜி. சங்கர குரூப். ஜி என்றே எல்லோரும் அழைப்பார்கள்.

மலையாள மகா கவி ஆன இவருக்குப் பாரதீய கவிஞன்” என்ற பட்டமும் கிடைத்திருக்கிறது.

கவிதைப் பூங்கொத்து இப்படிப்பட்ட பரிசு பெறுவதற்கு முன் எவ்விதப் பேச்சு மூச்சற்றிருந்தது. பரிசு பெற்றதோ இல்லையோ அதைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக, இல்லா ததும் பொல்லாததுமாகச் சர்ச்சைகள் கிளம்பிவிட்டன!

இந்நிலைக்காக வருந்துகிறார் கவிஞர். அவ்வருத்தத்தை ‘மலையாள மனேரமா என்ற மலையாள ஏட்டின் பேட்டியில் வெளிக்காட்டியும் இருக்கிறர்.

‘ஒடக் குழல்’ என் ருல் புல்லாங் குழல்!’

பமமல குழு

ஈ. கிருஷ்ணய்யர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்து, வெள்ளையர்களை எதிர்த்திட்ட புண்ணியத்துக்காகச் சிறை வாச நோன்பு இருந்த தீரர்.

ஒரு சமயம் விசாரணையின்போது, அவர் வாக்கு மூலம் கொடுத்தார்.

‘என் மனத்தின் இச்சைப்படி கலைஞன் வேலை, பம்மல்.’ குழுவில் தொண்டு புரிகிறேன். ஆணுலும் கட்டாயப்படி ஹை கோர்ட் வக்கீலாயிருக்கிறேன்!” - ‘பம்மல் என்றால் என்ன?’ என்று மறுபடியும் குறுக்கு விசாரணை நடந்தது.

“நீதிபதி ராவ்பகதூர் சம்பந்தம் முதலியாருக்குத்தான் பம்மல் என்று பேர். அவரது சொந்த ஊர் பம்மல். அவர் சட்டத்தின் உள்ளே ரீதிபதி. சட்டத்துக்கு வெளியே அவர் ஒர் அற்புதக் கலைஞர்” என்று பதில் சொன்னர் ஐயர்.

ஆட்சியின் விசாரணைக் குழு மலைத்தது!

சரித்திரத்துக்குத் தமிழ் -

இந்தியாவின் மொழிப் பிரச்னை இன்று உச்சக் கட்டத் தில் இருந்து வருகிறது. -

ஆலுைம் இப்பிரச்னையை நூல் வடிவில் பேசியிருக்கிறார் புலவர் ஒருவர். அவர் பன் மொழிகளிலும் புலவர்.