பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71

இந்நூல் 1948-ல் வெளியானது.

‘கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளில் இந்தியாவின்” பெருமையைத் தொடர்ந்து சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானல், தமிழ் மொழியைத்தான் சரண் அடைய வேண்டும், சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சி கி. பி.ஆரும், ஏழாம் நூற்றாண்டுடன் நின்று விட்டது. இந்தி மூலம் சென்ற நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும்தான் புரிந்து கொள்ள முடியும். தெலுங்கு, மலையாளம், கன்ன்டம் ஆகிய மொழிகளே நாடில்ை, கடந்த ஆறு நூற்றாண்டுகளை அறியலாம். தமிழ் ஒன்றின் துணை கொண்டுதான், கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளின் இந்திய வளர்ச்சியை, நாம் அறிய முடியும்!”

இவ்வாறு தமது இந்தியாவின் மொழிச் சிக்கல்’ எனும் நூலில் கூறுகிறார் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவர்கள்.

இந்நூலின் மேலட்டையில் இந்தியாவின் படம் தலை

கீழாகப் போடப்பட்டிருக்கிறது! -

பாட்டனுக்கு வரி

பாகிஸ்தான் பாட்டன் டாங்கிகளே நம் இந்தியத் துருப்புகள் மிகவும் சுலபமாக-எளிதாகப் பிடித்துக் கைப் பற்றி விட்டார்கள்.

ஆனல் அவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வருவது தான் இராணுவத்தினருக்குப் பெரும் பாடாகி விட்டது.

ஏன் தெரியுமா? -

வெளி நாட்டுப் பொருள்களான இந்த டாங்கிகளின்மீது சுங்க வரி கட்டியாக வேண்டுமென்று மத்திய சுங்க வரி, இலாகா வற்புறுத்தியதுதான்!

புத்தர் முன்னே

இளங்காலை வேளை. -

கருணை வள்ளலாம் புத்த தேவன் அன்பே வடிவம் கொண்டு வீற்றிருந்தார். -

ஒர் அற்பன் அந்தப் புத்தர் பிரானைத் துாற்றிஞன்; வாய்க்கு வந்தபடி ஏசினன். to - புத்தர் அவனை நோக்கி வெகு அமரிக்கையுடன்; ‘அன்பனே! ஒருவன் பிறருக்குப் பரிசு கொடுப்பதை ஏற்கள் விடில், என்ன செய்யலாம் சொல்’ என்று கேட்டார்.