பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

உடனே அவன், ‘திருப்பிக் கொடுப்பதே உத்தமம்’ என்று விடையிறுத்தான்.

அறத் தலைவன் அழகிய முறுவலுடன், ‘நீ வாரி வாரி வீசினயல்லவா அந்த ஏச்சுக்களை நான் ஏற்க முடியாது, அன்பனே!’ என்றார்.

கொடிய அவ்வற்பன் வெட்கத்தால் குன்றி மறைந்: தான்! -

கருங்காலி வேலி

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி ஹால் மிகவும் பெருமை மிக்கது அல்லவா?

அந்தப் பெருமைக்கு உகந்தவர்-அந்தக் கவுரவத்திற்குச் சின்னம் அளித்தவர்தான் மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்.

தஞ்சை மண். ஆனல், உலக அரங்கில் அவரது புகழ் பிரசித்தம். ஆங்கிலேயர்களே அதிசயப்படும் அளவுக்கு ஆங்கிலத்தை விளையாட விட்டவர். -

இன்னும் கேளுங்கள்: 1935 ஆம் ஆண்டிலே, சென்னையில் அமைச்சரவையை அமைப்பதற்கு காங்கிரஸ்காரர்கள் இனங்கவில்லை.

உடனே அந்த வெள்ளைக்காரக் கவர்னர் சாஸ்திரியை அழைத்து, சென்னையில் மந்திரி சபையை அமைக்குமாறு: கேட்டுக் கொண்டார். - - - ‘அந்தக் கருங்காவி வேலையைச் செய்வதற்கு என்னைத் தான பார்த்தீர்?’ என்று ஆத்திரப்பட்டாராம் மகாகனம் வி. எஸ். எஸ், சாஸ்திரி.

ஆங்கிலேய அரசு அளித்த ஸ்ர்” பட்டத்தைக் காற்றில் பறக்க விட்ட தேசிய மனம் கொண்ட மாமேதை. அண்ணல் காந்திஜியின் உற்ற நண்பராயிற்றே! இதய ஒலி

ரசிகமணி டி. கே. சி. சொல்கின்மூர்! சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன், திருச்சிராப்பள்ளிக்கு வந்து, எஸ். பி. ஜி. காலேஜில் தமிழின் அருமையைப் பற்றியும் வளத்தைப் புற்றியும் பிரசங்கம் செய்தார்கள். நானும் பிரசங்கத்தைக் கேட்கப் போயிருந்தேன். அப்போது நான் நாலாவது பார மரணவன். தமிழ் மகளின் நகை பட்டியலை டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் எடுத்துக் காட்டியபோது, அதாவது, தலைக்குச் சூளாமணி, மார்புக்குச் சிந்தாமணி, கர்துக்குக்