பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

லண்டன் பார்லிமெண்ட் கட்டடத்தின் அருகில் உள்ள தேம்ஸ் பாலத்தில் நின்று கொண்டு மக்களுக்கு ஒஇயில்’ பயணம் செய்ய ஏற்பாடு செய்ய முடியாத அரசாங்கம் இது!...இனிமேல், அரசாங்கம் இலவசமாக பஸ் விட வேண்டும்!’ என்று ஜான்ஸனும் கோல்ட் ஸ்மித்தும் பேசி, தங்களது வயிற்றெரிச்சலைத் தீர்த்துக் கொண்டார்களாம்!

பேசத் தயங்கினுள் நேரு

உலகத்தில் உள்ள தலை சிறந்த பேச்சாளர்களின் பட்டிய லிலே மனிதகுல மாணிக்கம் நேருஜிக்குக் குறிப்பிட்ட ஓர் இடம் எப்போதுமே ஒதுக்கப்பட்டிருக்கும்!-இது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை.

ஆனுல் நேரு கேம்ப்ரிட்ஜில், ட்ரினிட்டி காலேஜில்” கல்வி பயின்றபோது மாணவர் அவை முன் நின்று சில நிமிடங்கள் பேசக்கூட தயங்கினர்; கூச்சப்பட்டார். இந்திய மாண்வர் ஒன்றுகூடி சங்கம் அமைத்து, இந்தியப் பிரச்னைகள் குறித்து அடிக்கடி உரையாடுவது வழக்கம். பல மாதங்களில் ஒரு தடவைக.ட மேடையேறிப் பேசாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும் என்பதும் விதியாக அமைந்திருந்தது.

ஜவாஹரிடம் கூச்சமும் தயக்கமும் நிறைந்திருந்ததால், அவர் மேடையில் ஏறி நிற்கக்கூட அச்சமடைந்து, விதிக்கப் பட்ட அபராதங்களை மட்டும் தவருமல் கட்டவும் துணிந்தார்.

மேலைநாட்டுப் படிப்பை முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பினர் நேருஜி. இந்திய விடுதலைக் கிளர்ச்சியில் தீவிர மாக ஈடுபடத் தொடங்கினர். நாட்டின் விடுதலையில் அவர் கொண் டிருந்த ஆர்வம் அவரைப் பேச வைத்தது; பேசினர். குறிப்பிட்ட இரண்டு மூன்று கூட்டங்களிலேயே அவரது பேச்சுத் திறன் பலராலும் பாராட்டப் பட்டது. -

நேருஜி இந்தச் சமயத்தில் அலகாபாத்தில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சு மக்கள் நெஞ்சங்க ரிலே விடுதலை உணர்வை வெகுவாகத் தூண்டிவிட்டது-இச் சம்பவம் பற்றி நேருஜி தமது இந்திய வரலாறு நூலில்

பெருமையோடு குறிப்பிட்டிருக்கின்றர்.

காந்திஜி வர்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த சமயம்

கல்தூர் தனது பேத்திக்கு நகை செய்து போடுவதற்காக அவ்வப்போது கிடைத்த பணத்தை யெல்லாம் சேர்த்து