பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

டேவி விளக்கு

மின் விளக்கு கண்டு பிடிக்கப்படும் முன்னர் டேவி விளக்கு என்ற விளக்கைக் கண்டு பிடித்தவர் ஹம்ப்ரி டேவி எனபவா. -

அவர் புகழ் பெறுவதற்கு முன், ஒரு வைத்தியரிடம் வேலைக்கு அமர்ந்திருந்தார். அவர் தனியாக இருக்கும்போது தம்மை மறந்து, தம்முடைய கருத்துக்களே வாய் விட்டுப் பேசுவது வழக்கம்.

ஒரு முறை அவருடைய வைத்தியர், அவரிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, பக்கத்து ஊரிலிருந்த ஒரு நோயாளி விடம் கொடுத்து விட்டு வரச் சொன்னர். போகும் வழியில் சொற்பெருக்குச் செய்து கொண்டே சென்றார் டேவி. -

நோயாளியின் வீட்டுக்குப் போப் பார்த்தபோது, அவரது கையில், வைத்தியர் கொடுத்த மருந்துப் புட்டி காணப்படவில்லை. -

திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மருந்துப் புட்டி, ஒரு வயலின் ஒரத்தில் கிடந்ததாம்! தம்மை மறந்து அப்படிப் பிரசங்கம் செய்திருக்கிார் டேவி-கையிலிருக்கும் பொருள்ைத் தூக்கி எறியும் அளவுக்கு! - -

ஞாபக மறதி

இஸ்ரேல் நாட்டுக்குப் புதிய ஜனதிபதியாக வந்துள்ள லால்மான் ஷாலார் அவர்களுடைய ஞாபக மறதியைப் பற்றிப் பல ரஸமான கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று இதோ:

ஒரு முறை அவர் அமெரிக்க நாட்டில் பல ஊர்களில் பிரசங்கம் புரிய அழைக்கப் பட்டிருந்தார். ஒரு சமயம் அவர் ரயிலில் பிரயாணம் .ெ ச ப் து கொண்டிருந்தபோது, திடீரென்று தன் பைகளைத் துழாவிப் பார்த்தார். அவரது ரயில் டிக்கெட், அத்துடன் அவர் பணப் பையும் காணவில்லை. அவரது அவல நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு சகப் பிரயாணி ஒருவர் பணம் கொடுக்க முன் வந்தார். அதற்கு நன்றி தெரிவித்து விட்டு, ங்களிடம் பணம் வாங்கிக் கொள்வதனால் என்ன பிரயோசனம் எனக்குத்தான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது மறந்து

விட்டதே’ என்றாராம்!