பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

பிரிட்டிடிஷ் மன்னரைத் தலைகீழாகக் கவிழ்த்து விட்டாயே!” என்று சிரித்தார்.

கவரில் ராஜா தபால் தலையை தலைகீழாக ஒட்டிவிட்டான் வேலைக்காரன்.

காந்திஜியின் முடி

காந்திஜி தென்னுப்பிரிக்கா போன போது தானே முடி வெட்டிக் கொள்ள வேண் டிய அனுபவம் ஒன்று ஏற்பட்ட்து. அவர் ஒரு கிராப் வெட்டும் சலூனுக்குச் சென் முர். அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் கறுப்பரை அறுவருப்பாக நடத்திஞர்கள், எனவே அந்தச் சலுான் கடைக்காரர் காந்தி ஜிக்கு மு வெட்ட மறுத்து விட்டார்.

பார்த்தார் காந்தி: வேறு வழியோ இல்லை. தாமே ஒரு கத்தசிக்கோலை வாங்கி கண்ணுடியைப் பார்த்து வெட்டிக் கொண்டார். கஷ்டமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு மாதிரி தம்மைத் தயார் செய்து கொண்டு, நீதிமன்றத் திற்குப் போனுர், எல்லோரும் அவரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். - - -

‘உங்களது தலைமயிருக்கு, என்ன ஆபத்து வந்தது? எலிகள் ஏதாவது கத்தரித்து விட்டனவா?’ என்று கிண்டல் செய்தார்களாம்!

‘எனக்கு நானே முடி வெட்டிக் கொண்ட சிறப்பைப் பாராட்டி முதலில் நீங்கள் கற்றுக் கொள்ளலாமே என்றார் காந்திஜி. - -

வறுத்த மீனும் பஞ்சப் பேயும்

சோவியத் நாட்டிலே அப்பொழுது மிகப் பயங்கரமான பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. ஒட்ஸ், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் தோல் எது கிடைத்தாலும், மக்கள். அதைத் தின்று வந்தார்கள். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு ஒரு இறிய ரொட்டித் துண்டு மாத்திரமே கொடுக்கப்பட்டு வந்தது. . . . . . - . . .

மக்கள் தலைவர் லெனின் தேனீரை சர்க்கரையின்றியே அருந்தி வந்தார். நாடு முழுவதும் பட்டினியால் அல்லல் பட்டு வாடி வருந்திக் கொண்டிருக்கையில் தாம் மட்டும். நன்றாக உண்டு வாழ அவர் மனம் ஒப்பவில்லை.

அன்று, க்ரெம்ளினில் உள்ள தம் அலுவலக அறையில் அன்றாடக் கடமை ஒன்றில் மனம் ஒன்றியிருந்தார் தோழர் லெனின், -