பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

&0

பெட்ரோகிராடிலிருந்து மீன் துறைப் பொறுப்பாளர் ஒருவர் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். மீன் குறைந்த அளவில் கிடைப்பதற்கான காரணங்களே மீனவர் நின்று கொண்டே லெனினிடம் விவரித்தார். லெனின் இரண்டு தடவைகள் அவரை உட்கார்ந்து பேசும்படி கூறியும் அவர் உட்காராமல் நின்று கொண்டே பேசி னுர் ஏன் தெரியுமா? அவர் லெனினுக்கென்று விசேஷமாக மீன் வறுத்து பொட்டலம் கட்டிக் கொணர்ந்திருந்தார். அத்தப் பொட்டலம் அவருடைய முதுகுப்புறத்தில் இருந்தது. வந்த பேச்சு முடிந்தது: ‘'வேண்டிய பணம் தர ஏற்பாடு செப் கிறேன். அதிக அளவு மீன் பிடித்து மக்களின் பஞ்சத்தைக் குன்றக்க முயலுங்கள்’ என்றார் லெனின். பேச்சு முடிந்ததும், லெனினிடம் தன் அன்பளிப்பைக் கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தித் திரும்பவேண்டுமென்பது அம் மீனவரின் விருப்பம்.

லெனின் அப்பரிசைக் கண்டு வருந்தினர். ஏன் அவருக்குக் கோபம்கூட வந்து விட்டது. ‘தோழரே! நாட்டிலே குழந்தைகள் பலர் பட்டினியால் அவதிப்பட்டுக் கொண் :ருக்கையில், நீங்கள் இதை எனக்காகக் கொண்டு வந் திருக்கவே கூடாது!’ என்று கண்டிப்பாகக் கூறி, அப் பரிசை ஏற்க மறுத்து விட்டார் லெனின்.

தான் அன்புடன் லெனினுக்காகத் தயாரித்துக் கொண்டு

வந்த வறுத்த மீனே அவர் எடுத்துக் கொள்ளவில்லையே என்று மின் துறைப் பொறுப்பாளர் வருந்தினர். ஆகவே மீண்டும் வற்புறுத்திர்ை.

லெனின் உடனே அழைப்புப் பொத்தானே அழுத்தவே செயலாளர் வந்தார். மீனவர் மருண்டு போய் விட்டார். செயலாளரிடம் இந்த மீன் பொட்டலத்தைக் குழந்தைகள் இல்லத்தில் உடனடியாகச் சேர்ப்பியுங்கள்” என்று லெனின் ைேணயிட்டார். பிறகு மீனவரோடு கைகுலுக்கிவிட்டு தோழரே! இந்த அன்பளிப்பிற்கு சோவியத் நாட்டுக் குழந்தைகள் சார்பில் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக் கிறேன்!” என்றார் லெனின்.