பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

புரட்சி செய்த


விபச்சாரிகளை ஒழிக்க வேண்டுமென்று அந்த நாடு செய்த சட்டப்படி ஒரு நாள் திடீரென காவலர்கள், அந்தக் காய்ந்து போன கன்னியின் மேல் படையெடுத்தனர். கசையடிக்குப் பயந்து ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தாள் நாநா. அங்கே எமிலிஜோலாவும், அவனுடைய இணை பிரியாத் தோழன் ஓவியன் செஸானேவும் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜோலா உண்டிக்குக் கஷ்டப்படும் போதெல்லாம் தன் ஓவியங்களை விற்று ஜோலாவுக்கு உதவி செய்துக் கொண்டிருப்பான். செஸானே ஓவியங்கள் விற்காத நாளில் கூரைமேல் உட்காரும் குருவிகளையும், புறாக்களையும் அடித்துப் பொசுக்கிச் சாப்பிடுவார்கள். இதுதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையாக இருந்தது. ஒரு நாள் கிடைத்த பணத்தைக்கொண்டு விடுதிக்குச் சிற்றுண்டி அருந்தச் சென்றார்கள். அந்த நேரந்தான் போலீஸ்காரர்களால் விரட்டப்பட்ட நாநா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் அலறலைக் கண்டு ஜோலா தன் பக்கத்தில் உட்காரும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க உட்கார்ந்தாள். இதற்குள் காவலர்கள் வந்து இழுத்தார்கள். “அவளைத் தொடாதீர்கள், அவள் என் அபிமான மனைவி” என்று சொல்லிக் காவலர்களை வெளியே அனுப்பி விட்டான்.

அவர்கள் போன பின்பு, அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்குப் போய், அங்கிருந்து ஒரு சிறிய புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதை வைத்து ‘நாநா’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினான். “நாநாவைப் பற்றி நூலா?! எமிலி ஜோலா எழுதியிருக்கின்றானா?!! வெறு வேலையில்லையா அவனுக்கு?!!! என்று பேசினர் மக்கள். பரலோகத்தைப்பற்றி எழுதாமல், பரம பிதாவைப்பற்றி எழுதாமல், பாவ மன்னிப்பைப் பற்றி எழுதாமல், ஒரு பரத்தையைப் பற்றி எழுதியிருக்கின்றானே, என்றெல்லாம் கேலி செய்தனர் மக்கள். நூல் அச்சாகி வெளியே வந்தது. மதிப்புரைகளும் வெளியே வந்தன. புத்தகக் கடைகளில் நாநா. அதில் என்ன தான் எழுதியிருக்கின்றான். இப்படி ஒரு ஐயம்: ஐயம் தடித்து