பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

101

அறைகுறை பிரெஞ்சு மொழி தெரியுமாகையால் அவள் படித்துவிட்டு அப்படியே வைத்திருந்தாள்.

எப்படியோ இதற்கு இரண்டு சாட்சிகளை தயார் செய்து இராணுவ நீதி மன்றத்தில் வழக்கைத் தொடுத்துவிட்டான். குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறான் டிரைபஸ். குற்றம் விசாரிக்கப்படுகிறது. டிரைபஸ் சொன்ன பதில் எனக்காக வாதாட இங்கு யாருமில்லை. நான் செய்த குற்றமெல்லாம் நான் ஒரு யூதனாகப் பிறந்தேனே அது தான், என்று சொல்லி எவ்வளவோ மன்றாடினான். கருணை மிகுந்த நீதிபதி, இவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து டெவில்ஸ் தீவுக்கு அனுப்ப வேண்டுமென தீர்ப்பளித்துவிட்டனர்.

இராணுவத்திடலிலே கொண்டு வந்து நிறுத்தினர். உடைகளைக் களைந்தனர், விலங்கிட்டு கப்பலேற்றி கொண்டு போகின்றனர். கறை மறையும் வரை கண்ணீர் சிந்தினான். எந்தத் தாயகத்திற்காக நான் செந்நீர் சிந்தினேனோ. அந்தத் தாயகமே! நான் செய்த குற்றமென்ன, வின் மீன்களே! நான் குற்றவாளியா? நிலவே நீயே சாட்சி, நான் செய்த குற்றமென்ன? இப்படி அழுது புலம்பினான். டெலில்ஸ் தீவு நெருங்கிவிட்டது. இறங்கு என்றனர்; இறங்கினான்.

ஏற்றிச் சென்ற கப்பல் திரும்பிவிட்டது. கப்பல் மறையும் வரைப் பார்த்திருந்தான். தனது அருமை தம்பியும், அன்பான மனைவியும் கடற்கரையில். ஒரு குற்றமுமறியாத டிரைபஸ் டெவில்ஸ் தீவில். யூதன் ஒழிந்தான் என்று எக்காள மிட்டது இராணு முகாம். கபட நாடகம் முடிந்துவிட்டது என்று எக்களித்தனர் வஞ்சகர்கள். நாடகமே இனிதான் தொடங்குகிறது.

நீ எதுவும் உன் நாட்டிற்குச் சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டனர். அதற்கு டிரைபஸ், “நான் குற்றமற்றவன்” என்ற வார்த்தைகளை மட்டும் பதிலாகச் சொன்னான்.

கணவனைக் கண்ணுக் காணு தீவுக்கனுப்பியதால் கண் கலங்கிய மனைவி, உடன் பிறந்தவனை வீண் பழி சுமத்தி ஆழி