பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 புரட்சி செய்த

போது அவன் யூதன் என்று தெரியவில்லையா? ஏன்? நகரமும், நமது நகர மக்களும் உயிரையே அவனிடம் ஒப்படைத்திருந் தோமே, அப்போது அவன் யூதனென்று தெரியவில்லையா. வேண்டத்தகாத யூத எதிர்ப்பு இயக்கம் தோன்றிய பிறகு தானே அவன் ஒரு யூதன் என்று தெரிகிறது. அவன் சாரத்தை யெல்லாம் உறிஞ்சி சக்கையாவதற்கு முன்னே அவன் ஒரு யூதன் என்று தாக்கி எறிந்துவிட்டோமே. இந்த நன்றிகெட்ட செயலுக்காக நாம் வெட்கப்படவேண்டாமா. கொஞ்சம் நடு நிலையோடு சிந்தித்துப் பாருங்கள். இந்த வழக்கை நான் நடத்துவதாக இருக்கிறேன். அன்பு கூர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள்: -

அலுவலகம் இங்ஙனம், பிகாரோ, பாரீஸ், உங்களன்புள்ள எமிலிஜோலா.

3. நாட்டு மக்களுக்குக் கடிதம்

நமது தாயகத்தின் கெளரவமிக்க மக்களே! இளைஞர்களே!

அடிக்கடி அமைதி காணு நமது நாடு ஏதாவது"ஒரு நூற்றாண்டில் அமைதியுறுமா என்று பார்க்கிறேன். அது முடிய வில்லை. நாம் வாழும் இந்த நாட்டில் நீதியையே வெட்கி தல்ை குனியச் செய்யும் செயல் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் இராணுவ தலைவன் டிரைபஸ் விவகாரம். அவன் குற்றவாளியா, அல்லவா என்று நிரூபிக்கும் பொறுப்பு இந்த நாட்டின் குடிமக்களாகிய நம்மைச் சார்கிறது. ஏனெனில் யூதரல்லாத ஒரு ஆயிரம் இராணுவ வீரர்களுக்கும் இராணுவத் தலைவனாகிய டிரைபக்கும் ஏற்பட்ட விரோதம் என்று நாம் கவலையற்று இருக்க முடியவில்லை வரிசெலுத்துகிற செலுத்தாத குடிமக்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த இராணு வத்தை நம்பி நிம்மதியாக இருக்கிறதோ. அந்த நாட்டில் வாழும் குடிகளாகிய நாம் வாளாயிருக்கமுடியாது. அவன் ஒரு