பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகைத் திருத்திய உத்தமர்கள்

T

சாணக்கியன்

மன்னர் மன்னன் இத்திக்கு சுகந்தா, என்னும் பட்டத்தரசி யும், முரா என்னும் ஆசை நாயகியும் இருந்தனர் ஒரு சமயம் முனிவர் ஒருவர் அரசனைக் காண வந்தார். முனிவரின் திருவடி களை அரசன் கழுவி, அந்தத் தண்ணீரைத் தன் மனைவிமார் இருவர் மேலும் தெளித்தான். அப்போது ஒன்பது துளிகள் மூத்தவள் சுநந்தா தலையிலும், ஒரு துளி முரா என்பவள் தலை யிலும் விழுந்தன. சிறிது காலம் சென்றபின் இருவரும் கருத் தரித்தனர். உரிய காலத்தில் முரா என்பவள் ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள். பட்டத்தரசியோ ஒன்பது பிண்டங் களைப் பெற்றாள். அந்த ஒன்பதின்மர்தான் நவ நந்தர்கள்.

மூரா ஈன்ற மகன் நாளடைவில் நூறு மக்களைப் பெற்றான் அந்நூற்றுவரில் மூத்தவனே சந்திரகுப்தன். அந்த நூறு பேரிலும் சந்திரகுப்தன் அழகிலும், மதியிலும் சிறந்து விளங் கினன். இவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தமையாலும் பொருமையுற்றனர் நவநந்தர்கள். இவ்விரு திறத்தாரிடையே மூண்ட பகைத் தீ மலையென வளர்ந்தது. நவ நந்தர்கள் அரச அவைக் கூட்டுவதற்காக பூமிக்குள் ஒர் அறையைக் கட்டுவித் தனர். சந்திரகுப்தன் முதலிய நூறு பேரையும் அங்கே அழைத் துப்போய் தந்திரமாய் உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டனர்.