பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உலகைத் திருத்திய

சந்திரகுப்தன் செய்து அரசுரிமையைப் பெற்றான். பிறகு நவநந்தர்கள் கொல்லப்பட்டார்கள். யாரால்?

மாசிடோனிய மாவீரன் அலெக்சாண்டர் தன் தாயகத்திலிருந்து புறப்பட்டுப் பல நாடுகளை வென்று, இமயமலையடிவாரம் வந்து, இந்தியாவின் உள்ளே நுழைய வழி தெரியாமல் காத்திருந்தான். அப்போது தட்சசீலத்தை அம்பி என்ற பார்ப்பன மன்னன் ஆண்டுக்கொண்டிருந்தான். அலெக்சாண்டர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு ஒரு ஒற்றனை அனுப்பி, அலெக்சாண்டரோடு எத்தனை போர் வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து வரச் சொன்னான். போனவன் வீரர்களின் கணக்கை எடுத்துக்கொண்டு வந்து மூவாயிரம் வீரர்கள் வந்திருப்பதாகச் சொன்னான். அம்பி பூரண கும்பம் தயார் செய்தான். மூவாயிரம் பேருக்கு பசுங்கன்றின் இறைச்சியைப் பக்குவப்படுத்திக்கொண்டு போய் விருந்து நடத்தி, அலெக்சாண்டரையும் வீரர்களையும் கைபர் கணவாய் வழியாக உள்ளே அழைத்துக்கொண்டு வந்து விட்டான். ‘ஒகோ! இங்கேயும் சொரணையற்ற அடிமைகள்தானா’ என்று நினைத்துக்கொண்டே ஜீலம் ஆற்றங்கரைக்கு வந்தான் அலெக்சாண்டர். வீர புருஷோத்தமன் படைகளோடு நிற்கிறான். ‘மாசிடோனியாவிலிருந்து இந்த மலையடிவாரம் வரையில் நம்மை எதிர்த்தவன் எவனும் இல்லை. நமது போர்முழக்கம் கேட்டவுடன் ஆயுதங்களைத் தரையில் போட்டு விட்டுத் தலைதெறிக்க ஒடிய தார்வேந்தர்கள் பலர். கப்பம் கட்டித் தங்கள் தலையை உடலோடு வைத்துக்கொண்டு உயிர் பிழைத்தவர்கள் பலர். கேட்டதைத் தந்து தங்கள் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டு, தாழ்வாரத்தில் நின்று உயிர்ப் பிச்சைக் கேட்டவர்கள் சிலர். நமது குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டவுடன் குழம்பிப் போனவர்கள் சிலர். இங்கேயும் இந்த மலையடிவாரத்திலும் ஒரு நல்ல அடிமை கிடைத்தான் என்று இறும்பூது எய்தினோம். ஆனால் புருடோத்தமனாம்-நம்மை எதிர்க்கிறான்’ படைகளுக்குக் கட்டளையிட்டான். போர் மூண்டது. இறுதியில் புருடோத்தமன் தோற்றான்.